" நீயே பரிபூரண நித்தியம் "

Blog


வணக்கம் ஜியெம், கடந்த காலம் என ஒன்று இல்லவே இல்லை…. இக்கணமே புதிதாய் பிறந்துள்ளோம்…. இதை விளக்கவும்.

November 9, 2022 | 264 views |



ஜியெம்: காலம் என்பது என்ன? எங்கு உள்ளது? மாறிக்கொண்டே இருப்பது காலம் என்றால் அது எவ்வாறு உண்மையாகும்? கடந்த காலம் என்றால் என்ன? எங்கு உள்ளது? நினைவில் உள்ளது என்றால் நினைவு எங்கு உள்ளது? கடந்தது உண்மையாகுமா? அது தற்போது உள்ளதா?

Continue Reading

வணக்கம் ஜியெம், தானாகவே காலையில் விழிக்கின்றேன், தானாகவே வடிவங்கள் தென்படுகின்றன, எனது வடிவம் உட்பட, பின் தானாகவே அனைத்து நிகழ்வுகளும் என்னை சுற்றி நிகழ்கின்றன. இரவில் தானாகவே தூக்கத்தில் விழுகிறேன், தானாகவே கனவு உண்டாகிறது, தானாகவே கனவு மறைகிறது, தானாகவே ஆழ்ந்த தூக்கம் உண்டாகிறது, பின் காலையில் தானாகவே கண் விழிக்கின்றேன். தானாகவே நடந்து கொண்டு இருக்கும் இந்த பிம்ப விளையாட்டில் எனது பங்குதான் என்ன? தேவை இல்லாமல் கவலைப் படுகின்றேனே!

November 7, 2022 | 221 views |



ஜியெம்: அனைத்தும் தானாகவே நிகழ்கிறது என அறிந்தால், எப்படி கவலைப்பட முடியும்?  சுய அறிவு என்பதே ஆனந்தம் தானே! சுய அறிவு தன்னை தனித்த வடிவமாகவும், தன்னில் இருந்து அனைத்தும் விடுபட்டு இருப்பதாகவும் ஒப்புக் கொள்கிறது! எனவே கவலையுறுகிறது! கே: இந்த

Continue Reading

வணக்கம் ஜியெம், கனவு காண்கின்ற பொழுது நாம் அந்த கனவிற்குள் சென்று கனவை மாற்ற இயலாது ! அது போலவே விழிப்பு நிலையில் சுய அறிவு உதித்தவுடன் காலை முதல் இரவு உறங்கும் வரை இங்கே நிகழும் அத்தனை நிகழ்வுகளும் கனவே! இதில் எந்த நிகழ்வையும் என்னால் மாற்ற இயலாது….! என என்னால் சும்மா இருக்க இயலவில்லையே, சதா நிகழ்வை மாற்ற முயற்சித்து துன்புறுகிறேனே…..ஏன்?

November 2, 2022 | 216 views |



ஜியெம்: இங்கு நான் என்பது எது? காணும் நிகழ்வுகளா? நிகழ்வுகள் எங்கு நிகழ்கிறது? உன் இருப்பிலா? பர வெளியிலா? பரம் எங்கு உள்ளது? உன் நான் எனும் இருப்பில் தானே அனைத்தும் நிகழ்கிறது தற்போது! நான் எனும் இருப்பு தானாகவே நிகழ்கிறது,

Continue Reading

வணக்கம் ஜியெம், சும்மா இரு! இதை விளக்கவும்.

October 31, 2022 | 141 views |



ஜியெம்: சும்மா இரு என்றால் வெறுமனே எவ்வித ஈடுபாடும் இன்றி பார்த்தலே ஆகும். சுய அறிவானது அனைத்தையும் அடையாளம் கொள்வதால் அனைத்தையும் நிஜமெனவே ஒப்புக் கொள்கிறது.  நீ சுய அறிவுக்கும் அப்பால், பார்ப்பவர் ஆக இருக்கிறாய்! ஆயினும், பார்க்கும் நிகழ்வுகளால், தன்னை

Continue Reading

வணக்கம் ஜியெம், நான் பார்ப்பவராக (Observer) இருக்க முயற்சிக்கின்றேன்… ஆயினும் அது ஏராளமான கற்பனைகளுடன் முடிகிறது.

October 26, 2022 | 248 views |



ஜியெம்: இங்கு ஏற்கனவே பார்ப்பவர் நீ தானே? அப்படியிருக்க, உன்னால் எப்படி பார்ப்பவராக முயற்சிக்க முடியும்? இது, ஒரு மலர்... தான் மலர் ஆக முயற்சிப்பது போல தான். எதை நீ பார்ப்பவர் என்கிறாய்? பார்ப்பவர் அமைதியாக பார்க்கிறார். பார்ப்பவர் வார்த்தைகளுக்கு

Continue Reading

வணக்கம் ஜியெம், இந்த சுய அறிவு ஏன் என்னை, இந்த வடிவம் தான் நீ என்றும், இந்த உலகமே உண்மை என்றும் நம்ப வைத்து, என்னை தீராத துன்பத்தில் தள்ளுகிறது? இந்த துன்பத்தை நான் எவ்வாறு களைவது? சுய அறிவின் நோக்கம் தான் என்ன?

October 22, 2022 | 131 views |



ஜியெம்: உன் சுய அறிவே இக்கேள்வியை கேட்கிறது! இங்கு நான் என்பதே சுய அறிவு தான்!  வடிவம் அல்ல! வடிவம் வாயிலாக தன் இருப்பை சுயம் அறிகிறது. இதுவே சுய அறிவு. சுயம் என்பது ஒளி! ஒளியில் தானாக அணுக்கள் தோன்றி,

Continue Reading

வணக்கம் ஜியெம், அடையாளப்படுத்திக் கொள்ளுதல் (personality) என்று தாங்கள் எதை கூறுகிறீர்கள்?

October 19, 2022 | 203 views |



ஜியெம்: வடிவம் சார்ந்த அடையாளங்கள். உன் சுய அறிவானது, தன்னை ஒரு தனித்த வடிவமாகவும், அதன் மேல் திணிக்கப்பட்ட அடையாளங்கள் நிஜம் என உறுதியாக இருக்கும் வரை தொடர்ந்து கலக்கமுற்று, நிறைவற்றதாகவே இருக்கும்.... சுய அறிவு தன்னை அறிய ஆரம்பித்தவுடன்,அமைதியாக, சலனமற்று

Continue Reading

வணக்கம் ஜியெம், ஆன்மீகம் என்பது எது?

October 12, 2022 | 217 views |



ஜியெம்: ஆன்மீகம் என்பது விழிப்புடன் இருப்பது. விழிப்பு என்பது உள்ளிருக்கும் அமைதியை அறிவது. விழிப்பாக இருக்கும் போது இயல்பாக செயல் படுவாய். இயல்பாக இருத்தல் என்பது எவ்வித திணிக்கப்பட்ட  அடையாளங்களும்  இல்லாமல் சுய அறிவுடன் செயல்படுவது. உன் உன்னத நித்தியத்தை அறிய

Continue Reading

வணக்கம் ஜியெம், எல்லையற்ற ஒன்றை ஒரு செயலினால் அடையமுடியாது.. எனில் என் முழுமையை அறிந்துக் கொள்ள முயற்சிப்பது வீண் செயலா? விளக்கவும்!

October 8, 2022 | 197 views |



ஜியெம் : கண்டிப்பாக முயற்சிப்பதே வீண்தான்! ஏனெனில், உன் எல்லை அற்ற இருப்பு உனக்கு தெரிவதே இல்லை. உன்னை ஒரு சிறு வடிவமாகவே ஒப்புக்கொள்கிறாய் தற்போதும்! எனவே தான் இக்கேள்வி! நீ ஏற்கனவே மாபெரும் உன்னத நிலையில் இருக்கிறாய்! ஆயினும் இதை

Continue Reading

வணக்கம் ஜியெம், விழிப்பு, உறக்கம் கனவு நிலைகள் இவை எதுவும் நான் அல்ல என்று நீங்கள் கூறும்போது எனக்கு அது புரிகிறது, இருந்தும் ஏன் நான் இன்னும் உண்மையை உணரவில்லை?

October 4, 2022 | 139 views |



ஜியெம்: நீ ஏற்கனவே, அற்புத உன்னத நிலையில் இருக்கிறாய்! உன் அற்புதம் உனக்கு தெரிவதே இல்லை! விழிப்பு, கனவு,உறக்கம் இவை எதுவும் நீ அல்ல என்பதை வார்த்தைகளால் புரிந்து கொள்ள இயலாது. வார்த்தைகளுக்கு முந்தைய அமைதி நிலையில் நிலைத்து அறிய முடியும்!

Continue Reading