" பரிபூரண நித்தியம் நீயே !"

Recent Posts

“ஜியெம்” பற்றிய குறிப்பு:

‘ஜியெம்’ தன் முழுமையை, தன் பிறவா உன்னதத்தை அறிந்தவர். தற்போது சென்னைக்கு அருகே உள்ள ஒரு சிறு பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஒரு விஞ்ஞானியாக வேலை பார்த்தவர். தன் முழுமையை அறிந்தவுடன் வேலையை விட்டு விட்டு தொடர்ந்து அமைதியில் தங்கி வெகு வருடங்களாக ஆழ்ந்த அமைதியில் இருந்தார்.

பின்னர்,இருமை அற்ற நிலையை,பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற்பட்ட உன்னதத்தை அறிய விரும்பும் தேடுதலில் உள்ள சாதகர்களுக்கு இந்த உண்மையை பகிர்ந்து வருகிறார்.

இவர் போதனைகள் மகத்தானது! அரிதானது!  ‘எவரும் பிறக்கவுமில்லை! இறக்கவு மில்லை! ‘ எனவும், அப்படியானால் பிறந்தது எது என கண்டு அறியவும் வழி நடத்துகிறார்.

நாம் அனைவரும் காணும் கனவில் தான் தடுமாறுகிறோமே தவிர , நிஜத்தில் நமக்கு ஒன்றுமே நிகழவில்லை! அற்புத நிலையில், ஆனந்த நிலையில் என்றென்றும் இருந்து கொண்டே உள்ளோம், என்பதை ஆணித்தரமாக விளக்குகிறார்.

இவரின் மகத்தான போதனைகளை இங்கே தொகுத்து வழங்கவே இவ்வலைத்தளம் உருவானது! சாதகர்கள் இதைப் படித்து தன் முழுமையை அறிய இது ஓர் அரிய வாய்ப்பு!

Know More

Resources