" நீயே பரிபூரண நித்தியம் "

Question & Answers


வணக்கம் ஜியெம், நான் பார்ப்பவராக (Observer) இருக்க முயற்சிக்கின்றேன்… ஆயினும் அது ஏராளமான கற்பனைகளுடன் முடிகிறது.

October 26, 2022 | 193 views |



ஜியெம்: இங்கு ஏற்கனவே பார்ப்பவர் நீ தானே? அப்படியிருக்க, உன்னால் எப்படி பார்ப்பவராக முயற்சிக்க முடியும்? இது, ஒரு மலர்... தான் மலர் ஆக முயற்சிப்பது போல தான். எதை நீ பார்ப்பவர் என்கிறாய்? பார்ப்பவர் அமைதியாக பார்க்கிறார். பார்ப்பவர் வார்த்தைகளுக்கு

Continue Reading

வணக்கம் ஜியெம், இந்த சுய அறிவு ஏன் என்னை, இந்த வடிவம் தான் நீ என்றும், இந்த உலகமே உண்மை என்றும் நம்ப வைத்து, என்னை தீராத துன்பத்தில் தள்ளுகிறது? இந்த துன்பத்தை நான் எவ்வாறு களைவது? சுய அறிவின் நோக்கம் தான் என்ன?

October 22, 2022 | 69 views |



ஜியெம்: உன் சுய அறிவே இக்கேள்வியை கேட்கிறது! இங்கு நான் என்பதே சுய அறிவு தான்!  வடிவம் அல்ல! வடிவம் வாயிலாக தன் இருப்பை சுயம் அறிகிறது. இதுவே சுய அறிவு. சுயம் என்பது ஒளி! ஒளியில் தானாக அணுக்கள் தோன்றி,

Continue Reading

வணக்கம் ஜியெம், அடையாளப்படுத்திக் கொள்ளுதல் (personality) என்று தாங்கள் எதை கூறுகிறீர்கள்?

October 19, 2022 | 148 views |



ஜியெம்: வடிவம் சார்ந்த அடையாளங்கள். உன் சுய அறிவானது, தன்னை ஒரு தனித்த வடிவமாகவும், அதன் மேல் திணிக்கப்பட்ட அடையாளங்கள் நிஜம் என உறுதியாக இருக்கும் வரை தொடர்ந்து கலக்கமுற்று, நிறைவற்றதாகவே இருக்கும்.... சுய அறிவு தன்னை அறிய ஆரம்பித்தவுடன்,அமைதியாக, சலனமற்று

Continue Reading

வணக்கம் ஜியெம், ஆன்மீகம் என்பது எது?

October 12, 2022 | 166 views |



ஜியெம்: ஆன்மீகம் என்பது விழிப்புடன் இருப்பது. விழிப்பு என்பது உள்ளிருக்கும் அமைதியை அறிவது. விழிப்பாக இருக்கும் போது இயல்பாக செயல் படுவாய். இயல்பாக இருத்தல் என்பது எவ்வித திணிக்கப்பட்ட  அடையாளங்களும்  இல்லாமல் சுய அறிவுடன் செயல்படுவது. உன் உன்னத நித்தியத்தை அறிய

Continue Reading

வணக்கம் ஜியெம், எல்லையற்ற ஒன்றை ஒரு செயலினால் அடையமுடியாது.. எனில் என் முழுமையை அறிந்துக் கொள்ள முயற்சிப்பது வீண் செயலா? விளக்கவும்!

October 8, 2022 | 142 views |



ஜியெம் : கண்டிப்பாக முயற்சிப்பதே வீண்தான்! ஏனெனில், உன் எல்லை அற்ற இருப்பு உனக்கு தெரிவதே இல்லை. உன்னை ஒரு சிறு வடிவமாகவே ஒப்புக்கொள்கிறாய் தற்போதும்! எனவே தான் இக்கேள்வி! நீ ஏற்கனவே மாபெரும் உன்னத நிலையில் இருக்கிறாய்! ஆயினும் இதை

Continue Reading

வணக்கம் ஜியெம், விழிப்பு, உறக்கம் கனவு நிலைகள் இவை எதுவும் நான் அல்ல என்று நீங்கள் கூறும்போது எனக்கு அது புரிகிறது, இருந்தும் ஏன் நான் இன்னும் உண்மையை உணரவில்லை?

October 4, 2022 | 85 views |



ஜியெம்: நீ ஏற்கனவே, அற்புத உன்னத நிலையில் இருக்கிறாய்! உன் அற்புதம் உனக்கு தெரிவதே இல்லை! விழிப்பு, கனவு,உறக்கம் இவை எதுவும் நீ அல்ல என்பதை வார்த்தைகளால் புரிந்து கொள்ள இயலாது. வார்த்தைகளுக்கு முந்தைய அமைதி நிலையில் நிலைத்து அறிய முடியும்!

Continue Reading

வணக்கம் ஜியெம், உலகத்திற்கும் அதன் நிகழ்வுகளுக்கும் முக்கியம் கொடுக்காமல், நான் ஏன் எனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

October 1, 2022 | 100 views |



ஜியெம் : உலகம் எங்கே உள்ளது? உன்னுடைய நான் எனும் இருப்பில் தான்..... உடலும், மனமும், உலகமும், அனைத்து காட்சிகளும் தோன்றுகிறது. இந்த நான் எனும் இருப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. உன்னுடைய இருப்பின் அமைதியில்..... அனைத்தும் தோன்றுகிறது.. இதை அறிந்தால் முதலில்

Continue Reading

வணக்கம் ஜியெம், முழுமை என்பது என்ன? எப்போது எப்படி உணரப்படுகிறது? என்பதை தெளிவுபடுத்தித் தாருங்கள்.

September 28, 2022 | 86 views |



ஜியெம் : முழுமையை விளக்க இயலாது. வடிவங்களுக்கு... வார்த்தைகளுக்கு... அப்பாற்பட்ட நித்தியம். முழுமை- இருமை அற்றது. அனைத்து தோற்றங்களும், நிகழ்வுகளும்,வார்த்தைகளும் இருமை நிலையில்  தற்போது  நிகழ்கிறது. இக்கேள்வி இருமை நிலையில் எழுகிறது. பதிலும் இருமை நிலையில் கொடுக்கப்படுகிறது. இக்கேள்வியை உன் சுய

Continue Reading

வணக்கம் ஜியெம், கடந்த காலம் என ஒன்று இல்லவே இல்லை…. இக்கணமே புதிதாய் பிறந்துள்ளோம்…. இதை விளக்கவும்.

September 24, 2022 | 115 views |



ஜியெம்: காலம் என்பது என்ன? எங்கு உள்ளது? மாறிக்கொண்டே இருப்பது காலம் என்றால் அது எவ்வாறு உண்மையாகும்? கடந்த காலம் என்றால் என்ன? எங்கு உள்ளது? நினைவில் உள்ளது என்றால் நினைவு எங்கு உள்ளது? கடந்தது உண்மையாகுமா? அது தற்போது உள்ளதா?

Continue Reading

வணக்கம் ஜியெம், ஒரு முறை அறியப்பட்ட ஞானம் நழுவுமா. அப்படி சகஜமாய் எந்தவித முயற்சியும் இல்லாமல் இருப்பில் இருக்க என்ன செய்ய வேண்டும்?

September 21, 2022 | 85 views |



ஜியெம்: இங்கு சுய அறிவே ஞானம் எனப்படுவது. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது! எல்லை அற்றது. வடிவத்திற்கு அப்பாற்பட்டது. தற்போது இந்த கேள்வியும் சுய அறிவே கேட்கிறது வடிவம் வாயிலாக! உனது இருப்பு அமைதி நிலையில் உனக்கு தெரியு மல்லவா? இதுவே சுய

Continue Reading