" நீயே பரிபூரண நித்தியம் "

Question & Answers


வணக்கம் ஜியெம், காலை எழுந்ததில் இருந்து, இரவு உறங்கும் வரை அனைத்து செயல்களும் சுய அறிவால் தானாகவே நிகழ்கிறது. இதில் நான் எங்கிருந்து வந்தேன்? இதில் நல்லது, கெட்டது, பயம், குற்ற மனப்பான்மை, மரணம் என்பதெல்லாம் எங்கிருந்து முளைத்தது? விளக்கவும்?

February 16, 2023 | 149 views |



ஜியெம்: இக்கேள்வி எந்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது? நிச்சயமாக, 'நான்' இந்த வடிவம் தான் என்கிற அடையாளத்தில் தான். நீ இந்த வடிவம் தான் என்றால், இந்த வடிவம் எதனால் இயங்கப்படுகிறது? இந்த வடிவம் என்பது என்ன? அணுக்களின் தொடர் வினை தானே? 

Continue Reading

வணக்கம் ஜியெம், ஆன்மீகம் என்பது எது?

February 13, 2023 | 143 views |



ஜியெம்: ஆன்மீகம் என்பது விழிப்புடன் இருப்பது. விழிப்பு என்பது உள்ளிருக்கும் அமைதியை அறிவது. விழிப்பாக இருக்கும் போது இயல்பாக செயல் படுவாய். இயல்பாக இருத்தல் என்பது எவ்வித திணிக்கப்பட்ட அடையாளங்களும் இல்லாமல் சுய அறிவுடன் செயல்படுவது உன் உன்னத நித்தியத்தை அறிய

Continue Reading

வணக்கம் ஜியெம், இங்கு அனைவரையும் இயக்குவது எது?

February 2, 2023 | 147 views |



ஜியெம்: இங்கு அனைவரும் எங்கு இருக்கிறார்கள்? உன் சுய அறிவில் தானே? உன் சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என நீ அறிவதே இல்லை. ஏனெனில், உன்னை ஒரு தனித்த வடிவமாகவே அடையாளம் கொள்கிறாய்! வடிவம் எதில் தோன்றுகிறது? உன்

Continue Reading

வணக்கம் ஜியெம், உண்மையில் நான் யார்?

January 26, 2023 | 157 views |



ஜியெம்: இக்கேள்வி எந்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது? உன் இருப்பு எவ்வாறு அறியப்படுகிறது? நான் என்பதை எதுவாக நீ தற்போது ஒப்புக் கொள்கிறாய்? நான் என்பது வடிவம் அல்ல! சுயமாக தோன்றிய அறிவே ! சுய அறிவே!என அறிவாயா? உன் சுய அறிவு

Continue Reading

வணக்கம் ஜியெம், அடையாளப்படுத்திக் கொள்ளுதல் என்று தாங்கள் எதை கூறுகிறீர்கள்?

January 6, 2023 | 255 views |



ஜியெம்: வடிவம் சார்ந்த அடையாளங்கள். உன் சுய அறிவானது, தன்னை ஒரு தனித்த வடிவமாகவும், அதன் மேல் திணிக்கப்பட்ட அடையாளங்கள் நிஜம் என உறுதியாக இருக்கும் வரை தொடர்ந்து கலக்கமுற்று, நிறைவற்றதாகவே இருக்கும்.... சுய அறிவு தன்னை அறிய ஆரம்பித்தவுடன்,அமைதியாக, சலனமற்று

Continue Reading

வணக்கம் ஜியெம், கடந்த காலம் என ஒன்று இல்லவே இல்லை…. இக்கணமே புதிதாய் பிறந்துள்ளோம்…. இதை விளக்கவும்?

December 28, 2022 | 133 views |



ஜியெம்: காலம் என்பது என்ன? எங்கு உள்ளது? மாறிக்கொண்டே இருப்பது காலம் என்றால் அது எவ்வாறு உண்மையாகும்? கடந்த காலம் என்றால் என்ன? எங்கு உள்ளது? நினைவில் உள்ளது என்றால் நினைவு எங்கு உள்ளது? கடந்தது உண்மையாகுமா? அது தற்போது உள்ளதா?

Continue Reading

வணக்கம் ஜியெம், அனைத்தில் இருந்தும் (வடிவம், எண்ணங்கள், உலகம்….. ) என்னை நீங்கள் விடுவிக்க முடியுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

December 25, 2022 | 286 views |



ஜியெம்: நீ காணும் அனைத்தும் எங்கு உள்ளது? நான் எனும் சுய அறிவில் தானே? சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என முதலில் அறியவும்! முதலில் சுய அறிவு என்பது தன்னை பற்றிய தன் இருப்பை பற்றிய அறிவு என

Continue Reading

அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம் இருமை ! அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை கொடுப்பது…. இரண்டற்ற, இருமையற்ற ஒன்றே அதற்கு சரியான வழி என்கிறீர்கள் – ஆனால் நான் காலை கண்ணை திறந்ததிலிருந்து எனக்கு இந்த இருமையே காட்சி அளிக்கிறது… இரவு முடிய…! அப்படி இருக்க நான் எவ்வாறு இருமையை கடப்பேன்?

December 13, 2022 | 141 views |



ஜியெம்: கண் விழிப்பதில் இருந்து உறக்கம் வரை நிகழும் நிகழ்வுகள் எங்கே நிகழ்கிறது? பர வெளியில் நிகழ்கிறது எனில், பரமெங்கு உள்ளது? நான் எனும் சுய அறிவில் தானே? முதலில் நீ அறிய வேண்டியது.... உன் நான் எனும் சுய அறிவே...

Continue Reading

வணக்கம் ஜியெம், நான் ஏன் விழிக்க வேண்டும்? விழிப்பின் அவசியம் என்ன? எதற்காக விழிக்க வேண்டும்?

December 10, 2022 | 238 views |



ஜியெம்: இக்கேள்வி தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. இங்கு நான் என்பது எது? தனித்த வடிவமா? வடிவம்தான் நீ எனில், இவ்வடிவத்தை எவ்வாறு அறிகிறாய்? உன் சுய அறிவில்தான்  தற்போது இந்த வடிவம் தோன்றுகிறது... உன் சுய அறிவின்றி, வடிவம் காணப்படுமா தற்போது?

Continue Reading

வணக்கம் ஜியெம், இந்த “நான்” என்ற அறிவு எதனுடனும் சம்பந்தம் வைக்காமல், தன்னில் தானாய் தனித்து இருப்பது எனும் போது, அது எப்படி தோன்றி மறையும் வடிவத்தையும், உணவையும் சார்ந்து இருக்க முடியும்!….? இந்த இடம் என்னை சற்று குழப்புகிறது. தயவுசெய்து, மேலும் என்னை தெளிவுபடுத்த வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

December 7, 2022 | 139 views |



ஜியெம்: சுய அறிவு எல்லையற்றது! வடிவமற்றது. இந்த பரந்த, விரிந்த சுய அறிவு தன் இருப்பை அறிய ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. சுய அறிவு வடிவத்தை படைத்து வடிவம் வழியாக 'நான் இருக்கிறேன்' என தன் இருப்பை அறிகிறது. வடிவத்திற்கு முன்பே

Continue Reading