" நீயே பரிபூரண நித்தியம் "

Question & Answers


வணக்கம் ஜியெம்.! என்னுடைய அடையாளம் (Personality) என்று எதை சொல்கிறீர்கள்?

May 28, 2022 | 292 views |



ஜியெம் : அடையாளங்கள் அனைத்தும் சார்புத்தன்மை உடையது. அடையாளங்கள் அனைத்தும் பொருளுக்கே! நீ பொருட்களுக்கு அப்பாற்பட்ட அற்புதம்! தோற்றம் மறைவுக்கு அப்பாற்பட்ட உன்னதம். ஆரம்பமும், முடிவும் இல்லாத நித்தியம். இதை நீ அறிவதே இல்லை! உன் இருப்பு எப்போது அறியப்படுகிறது? உறக்கத்திலா?

Continue Reading

வணக்கம் ஜியெம்.! பிரபஞ்சம், உலகம், காணும் வடிவங்கள் அனைத்தும் நிஜமாக தோன்றுகிறதே, இவையெல்லாம் எப்படி கனவாகும்,எனது வடிவம் உட்பட?

May 21, 2022 | 250 views |



ஜியெம் : உலகம் எங்கே உளது?  உன் சுய அறிவில் (Consciousness) தானே! உன் சுய அறிவில் தான் பிரபஞ்சம், கோள்கள், அனைத்து வடிவங்களும் நிகழ்கிறது என முதலில் அறியவும். தனித்த அடையாளத்தில் (Personality) தடுமாற்றமே! உன் சுய அறிவில் தான்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! சும்மா இரு! இதை விளக்கவும்.

May 18, 2022 | 198 views |



ஜியெம் : சும்மா இரு என்றால் வெறுமனே எவ்வித ஈடுபாடும் இன்றி பார்த்தலே ஆகும். சுய அறிவானது ( Consciousness) அனைத்தையும் அடையாளம் கொள்வதால் அனைத்தையும் நிஜமெனவே ஒப்புக் கொள்கிறது. நீ சுய அறிவுக்கும் அப்பால், பார்ப்பவர் ஆக இருக்கிறாய்! ஆயினும்,

Continue Reading

வணக்கம் ஜியெம்.! கனவு காண்கின்ற பொழுது நாம் அந்த கனவிற்குள் சென்று கனவை மாற்ற இயலாது ! அது போலவே விழிப்பு நிலையில் சுய அறிவு (Consciousness) உதித்தவுடன் காலை முதல் இரவு உறங்கும் வரை இங்கே நிகழும் அத்தனை நிகழ்வுகளும் கனவே! இதில் எந்த நிகழ்வையும் என்னால் மாற்ற இயலாது….! என என்னால் சும்மா இருக்க இயலவில்லையே, சதா நிகழ்வை மாற்ற முயற்சித்து துன்புறுகிறேனே…..ஏன்?

May 18, 2022 | 176 views |



ஜியெம் : இங்கு நான் என்பது எது? காணும் நிகழ்வுகளா? நிகழ்வுகள் எங்கு நிகழ்கிறது? உன் இருப்பிலா? பர வெளியிலா?   பரம் ( space) எங்கு உள்ளது? உன் நான் எனும் இருப்பில் தானே அனைத்தும் நிகழ்கிறது தற்போது! நான்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! “எது மாற்றத்திற்கு உட்படுகிறதோ அது உண்மை பொருள் அல்ல” என்றால் இங்கு எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டதாக தானே உள்ளது. அப்போது எது மாற்றம் இல்லாதது? எது உண்மையானது.?

May 14, 2022 | 165 views |



ஜியெம் : நல்ல கேள்வி! உன் சுய அறிவில் (Consciousness) காணும் அனைத்து தோற்றங்களும் விளக்க முடியாத வேகத்தில் தோன்றி மறைகிறது தற்போது. பார்ப்பதற்கு நிலையான தோற்றம் போல காட்சி அளிக்கிறது. நீ காணும் அனைத்தும் எங்கு தோன்றுகிறது? உன் சுய

Continue Reading

வணக்கம் ஜியெம்.! இந்த அகப்பயணத்தில் நம் உடலை துன்புறுத்திக் கொண்டுதான் உண்மையை அறிய வேண்டுமா?

May 12, 2022 | 211 views |



ஜியெம்: சுயம் உள்ளே உள்ளது! சுயத்தின் அறிவில் ' நான் எனும் இருப்பில் பரவெளியில், அனைத்து நிகழ்வுகளும் தானாகவே நிகழ்கிறது தற்போது! உடல் எனும் வடிவம் எங்கு நிகழ்கிறது? நான் எனும் சுய அறிவில் தானே? காணும் வடிவங்கள் அனைத்தும் உன்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! எக்கனவும் முழுமையற்றதாகவே உள்ளது போல, வாழ்க்கையும், வாழ்வில் நிகழும் நிகழ்வுகளும் முழுமையற்றதாகவே இருக்கிறது…….! ஆக, பூரணத்துவத்தை நான் எவ்விதம் பெறுவது?

May 11, 2022 | 213 views |



ஜியெம்: நீ எப்போதும் பரிபூரணமாகவே இருக்கிறாய்! இதை அறிவதே இல்லை! எனவே இக்கேள்வி! நீ பரிபூரணம், முழுமை! பிறவா நித்தியம்! உனக்கு ஒன்றும் நிகழவில்லை! தற்போது காணும் அனைத்தும் எங்கே நிகழ்கிறது? நான் எனும் சுய அறிவில் தானே? உறக்கத்தில் உன்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! புற பயணத்தில் நிறைவு தேடி வாழ்நாள் முழுவதும் அலைந்து… இறுதியில் சோகமும், களைப்புமே மிஞ்சியது எனக்கு ! அகபயணம் ஒன்றே நான் தேடியதை சரியாக காட்டும் என தற்போது நண்பரால் அறிந்து தங்களிடம் என் சோகம் களைய வந்துள்ளேன். இந்த அக உலக பயணத்தில் முதல் அடி எடுத்து வைக்கும் எனக்கு தாங்கள் கூறும் அடிப்படை போதனை என்ன? நான் செய்ய வேண்டியது என்ன? என தாங்கள் விளக்குவீர்களா?

May 7, 2022 | 240 views |



ஜியெம்:  உண்மை எங்கு உளது? உண்மை என்பது எது? காணும் காட்சிகளா? காட்சிகள் உண்மை என்பதால்தான் நீ அங்கும் இங்கும் அலைகிறாய் வெளியே! நீ காணும் காட்சிகளில் ஒரு துளி உண்மை கூட இல்லை என நீ அறியாய்! உண்மை வெளியே

Continue Reading

வணக்கம் ஜியெம்.! நான் ஏன் எப்போதும் அவசரத்துடனும், படபடப்பாகவும் உள்ளேன்?

May 4, 2022 | 269 views |



ஜியெம்: இங்கு 'நான் ' என எதை நீ ஒப்புக் கொள்கிறாய்? வடிவம் தான் நீயா? எனில் வடிவம் எவ்வாறு அறியப்படுகிறது? வடிவம் எப்படி இயங்குகிறது? வடிவம் எதில் தோன்றுகிறது? வடிவம் நீ என்றால், வடிவத்தின் இயக்கமும் நீயா? இயக்கமும் நீ

Continue Reading

வணக்கம் ஜியெம்.! உண்மையில் இங்கே என் வேலை என்பது எது?

April 30, 2022 | 226 views |



ஜியெம்: உண்மை என்பது என்ன? எப்போதும் மாறாதது அல்லவா? எப்போதும் மாறாதது இங்கு எது என அறிவதே முதல் பணி! மாறுவது எதுவும் உண்மை இல்லை எனில், இங்கே உனக்கு என்ன பணி இருக்கிறதாக ஒப்புக் கொள்கிறாய்? நீ காணும் அனைத்தும்

Continue Reading