" பரிபூரண நித்தியம் நீயே !"

Question & Answers


நான் அனுபவிக்கும் விஷயங்கள் எப்படி நிஜமற்றதாகும்? உதாரணமாக நான் இப்போது இந்த குளிர்ந்த நீரை பருகுகிறேன். இந்த அனுபவம் எப்படி நிஜமற்றதாகும்?

January 5, 2024 | 83 views |



ஜியெம்: எந்த அடையாளத்தில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது? தன்னை வடிவமாக அடையாளம் கொண்டு, தன்னில் இருக்கும் சுய அறிவை அறியாமல் எழும் கேள்வியே இது. உன் சுய அறிவு விழிக்காததால் உனக்கு பார்ப்பதெல்லாம் நிஜமாக தோன்றும். வடிவ அடையாளத்தில் காண்பதெல்லாம் கனவே!

Continue Reading

வணக்கம் ஜியெம், ஆழ்ந்த உறக்கத்தில் என் சுய அறிவு (consciousness) ஏன் மறைகிறது?

December 2, 2023 | 82 views |



ஜியெம்: ஆழ்ந்த உறக்கத்தில் உன் இருப்பு உனக்கு தெரிவதில்லை. உனது இருப்பு சுய அறிவின் தொடக்கத்தில் தான் அறியப்படுகிறது. அணுக்களின் தொடர் வினையன்றி (elemental interaction), நான் எனும் அறிவு நிகழாது. அணுக்கள் அறியாது தன் தொடர் வினையின் ஆரம்பத்தை! சுய

Continue Reading

வணக்கம் ஜியெம், கனவு கலைந்ததும் கனவில் வரும் விஷயங்கள் அனைத்தும் அர்த்தமற்று போவது போல, இந்த விழிப்பும் ஒரு கனவே என அறிவு பூர்வமாக அறிந்தும், இந்த விழிப்பும் கலைந்து, விழிப்பில் வரும் அனைத்து விஷயங்களும் அர்த்தமற்று போவதில்லையே ஏன்? எங்கு நான் தவறவிடுகிறேன்?

November 14, 2023 | 105 views |



ஜியெம்:  விழிப்பு என்றால் என்ன? அமைதி நிலையில் தன் இருப்பை அறிவது..... அமைதி நிலையில் உன் இருப்பை நீ அறிந்தால் உன் அறிவு விழிக்க ஆரம்பித்து விட்டது. விழிப்பு என்பது கண்களை திறந்து பார்த்தல் அல்ல... கண்களை மூடி அமைதியில் தன்

Continue Reading

வணக்கம் ஜியெம், எது அறிவு?

November 8, 2023 | 72 views |



ஜியெம்:அறிவு என்பது பொருள் சார்ந்தது அல்ல! தன்னை பற்றிய அறிவு, தன் இருப்பை பற்றிய அறிவு. அமைதியில் உன் இருப்பு உனக்கு தெரியும் அல்லவா? இந்த இருப்பை பற்றிய அறிவு. நான் இருக்கிறேன் அமைதி நிலையில் என்கிற அறிவு. நான் இருக்கிறேன்

Continue Reading

வணக்கம் ஜியெம், சுய அறிவு தான் அனைத்து காட்சிக்கும் காரணம் என்று புரிந்தாலும், நான் பார்ப்பவர் என்று நிலைத்து நிற்க முடியவில்லை. விவகாரம் என்று வரும்போது எதிர்வினை பண்ண வேண்டி உள்ளதே, இதை தவிர்க்க ஏதாவது பயிற்சி உள்ளதா?

November 8, 2023 | 60 views |



ஜியெம்: முதலில் அறிய வேண்டியது: நான் எனும் சுய அறிவில் அனைத்தும் தானாகவே தற்போது நிகழ்கிறது! பார்க்கும் நீ சுய அறிவிற்கும் அப்பால்! பார்க்கும் நீ, தற்போது நித்தியம்! இதை அறிவதே இல்லை! இங்கு சுய அறிவில் காணும் அனைத்தும் கனவின்

Continue Reading

வணக்கம் ஜியெம், உங்கள் போதனைகளை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை… என்னை மொத்தமாக திருப்பி போடுவது போல உணர்கிறேன்..! பயம் வருகிறது…. ஓடவும் முடியவில்லை.., விடவும் முடியவில்லை.., என்னை கை தூக்கி, வெளியே கொண்டு வருவீர்களா?

September 23, 2023 | 57 views |



ஜியெம்: தனித்த அடையாளமாக ஒப்புக் கொண்ட உன் சுய அறிவு தன்னை அறிய வாய்ப்பில்லை! தனித்த அடையாளம் வழியாக எனது போதனைகளை ஒப்புக் கொள்ள இயலாது. எனது போதனைகள் அனைத்தும் உன் சுய அறிவிற்கே (Consciousness)! சுய அறிவு தற்போது வசதியாக

Continue Reading

வணக்கம் ஜியெம், நிழல், நிஜம் புரிகிறது. நிழல் வாழ்வில் விவகாரம் செய்ய வேண்டி யுள்ளது. நான் ‘இருப்பாக,’ ‘உணர்வாக’ அனைத்தையும் வேடிக்கை பார்த்தாலும், அதன் , அதன் இயல்பாக செயல்படட்டும் என்று நினைத்தாலும், தலையிட்டு அதை நிவர்த்தி செய்ய வேண்டிய காரியத்தில் இறங்கவேண்டிய சூழ்நிலை வந்தாலும், நான் ஆகிய இந்த பொய்உடல், மனம் பொய்யான கர்மத்தை செய்ய வேண்டியது உள்ளது. செயலற்று இருக்க சூழ்நிலை இடம் தர வில்லை. இந்நிலையில் (நான்) எப்படி செயல்படுவது? (எனது அறிவும் செயலும் முரண்படுகிறது) விளக்க வேண்டுகிறேன்.

September 14, 2023 | 62 views |



ஜியெம்: இக்கேள்வி முற்றிலும் தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. 'நான் ஆகிய இந்த பொய் உடல், மனம் பொய்யான கர்மத்தை செய்ய வேண்டியுள்ளது'...... என்று சொல்லப்படுகிறது.... இங்கு நான் என்பதே சுய அறிவு தான்! சுயமாகவே உன் இருப்பு அறியப்படுகிறது.. உன் இருப்பை

Continue Reading

வணக்கம் ஜியெம், தன்னை அறிவதன் மூலம் முன்கூட்டியே அனைத்தையும் அறிய முடியுமா?

September 4, 2023 | 63 views |



ஜியெம்: இக்கேள்வி, தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. சுய அறிவில் நிலைத்தால், இங்கு அனைத்தும் தானாக நிகழ்கிறது என அறிந்தால், இக்கேள்வி எழாது. நிகழ்பவை அனைத்தும் தானாகவே நிகழ்கிறது, எந்த நிகழ்வும் நிஜம் இல்லை எனில், எந்த நிகழ்வை முன் கூட்டியே அறிய

Continue Reading

வணக்கம் ஜியெம், நான் ஏன் விழிக்க வேண்டும்?விழிப்பின் அவசியம் என்ன?எதற்காக விழிக்க வேண்டும்?

August 7, 2023 | 52 views |



ஜியெம்: இக்கேள்வி தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. இங்கு நான் என்பது எது? தனித்த வடிவமா? வடிவம்தான் நீ எனில், இவ்வடிவத்தை எவ்வாறு அறிகிறாய்? உன் சுய அறிவில்தான் (Consciousness) தற்போது இந்த வடிவம் தோன்றுகிறது... உன் சுய அறிவின்றி, வடிவம் காணப்படுமா

Continue Reading

வணக்கம் ஜியெம், உலக அளவு நிகழ்வுகளில் , உள் பயணம், மற்றும் வெளி பயணத்தில் சிக்கி கொண்டு விடுவேனோ என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.

August 7, 2023 | 48 views |



ஜியெம்: இக்கேள்வி, தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. உன் சுய அறிவே இக்கேள்வியை தான் தனித்து இருப்பதாக ஒப்புக்கொண்டு தடுமாற்றத்தில் கேட்கிறது. உலகம் எங்கே உள்ளது? உன் சுய அறிவில் (I am ness' Consciousness) தானே! உன் சுய அறிவில் தான்

Continue Reading