" நீயே பரிபூரண நித்தியம் "

Blog


வணக்கம் ஜியெம்.! எக்கனவும் முழுமையற்றதாகவே உள்ளது போல, வாழ்க்கையும், வாழ்வில் நிகழும் நிகழ்வுகளும் முழுமையற்றதாகவே இருக்கிறது…….! ஆக, பூரணத்துவத்தை நான் எவ்விதம் பெறுவது?

May 11, 2022 | 206 views |



ஜியெம்: நீ எப்போதும் பரிபூரணமாகவே இருக்கிறாய்! இதை அறிவதே இல்லை! எனவே இக்கேள்வி! நீ பரிபூரணம், முழுமை! பிறவா நித்தியம்! உனக்கு ஒன்றும் நிகழவில்லை! தற்போது காணும் அனைத்தும் எங்கே நிகழ்கிறது? நான் எனும் சுய அறிவில் தானே? உறக்கத்தில் உன்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! புற பயணத்தில் நிறைவு தேடி வாழ்நாள் முழுவதும் அலைந்து… இறுதியில் சோகமும், களைப்புமே மிஞ்சியது எனக்கு ! அகபயணம் ஒன்றே நான் தேடியதை சரியாக காட்டும் என தற்போது நண்பரால் அறிந்து தங்களிடம் என் சோகம் களைய வந்துள்ளேன். இந்த அக உலக பயணத்தில் முதல் அடி எடுத்து வைக்கும் எனக்கு தாங்கள் கூறும் அடிப்படை போதனை என்ன? நான் செய்ய வேண்டியது என்ன? என தாங்கள் விளக்குவீர்களா?

May 7, 2022 | 232 views |



ஜியெம்:  உண்மை எங்கு உளது? உண்மை என்பது எது? காணும் காட்சிகளா? காட்சிகள் உண்மை என்பதால்தான் நீ அங்கும் இங்கும் அலைகிறாய் வெளியே! நீ காணும் காட்சிகளில் ஒரு துளி உண்மை கூட இல்லை என நீ அறியாய்! உண்மை வெளியே

Continue Reading

வணக்கம் ஜியெம்.! நான் ஏன் எப்போதும் அவசரத்துடனும், படபடப்பாகவும் உள்ளேன்?

May 4, 2022 | 258 views |



ஜியெம்: இங்கு 'நான் ' என எதை நீ ஒப்புக் கொள்கிறாய்? வடிவம் தான் நீயா? எனில் வடிவம் எவ்வாறு அறியப்படுகிறது? வடிவம் எப்படி இயங்குகிறது? வடிவம் எதில் தோன்றுகிறது? வடிவம் நீ என்றால், வடிவத்தின் இயக்கமும் நீயா? இயக்கமும் நீ

Continue Reading

வணக்கம் ஜியெம்.! உண்மையில் இங்கே என் வேலை என்பது எது?

April 30, 2022 | 217 views |



ஜியெம்: உண்மை என்பது என்ன? எப்போதும் மாறாதது அல்லவா? எப்போதும் மாறாதது இங்கு எது என அறிவதே முதல் பணி! மாறுவது எதுவும் உண்மை இல்லை எனில், இங்கே உனக்கு என்ன பணி இருக்கிறதாக ஒப்புக் கொள்கிறாய்? நீ காணும் அனைத்தும்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! சுய அறிவு (Consciousness) தான் அனைத்து காட்சிக்கும் காரணம் என்று புரிந்தாலும், நான் பார்ப்பவர் (observer) என்று நிலைத்து நிற்க முடியவில்லை. விவகாரம் என்று வரும்போது எதிர்வினை (react) பண்ண வேண்டி உள்ளதே, இதை தவிர்க்க ஏதாவது பயிற்சி உள்ளதா?

April 30, 2022 | 158 views |



 ஜியெம்: முதலில் அறிய வேண்டியது : நான் எனும் சுய அறிவில் அனைத்தும் தானாகவே தற்போது நிகழ்கிறது! பார்க்கும் நீ சுய அறிவிற்கும் அப்பால்! பார்க்கும் நீ, தற்போது நித்தியம்! இதை அறிவதே இல்லை! இங்கு சுய அறிவில் காணும் அனைத்தும்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! நான் முக்தியை அடைய முடியுமா? அதற்கு வழிகள் ஏதேனும் உள்ளதா?

April 30, 2022 | 142 views |



ஜியெம்: முக்தி - பிறப்பு, இறப்பு எனும் இருமை நிலையில் இருந்து விடுபடுவதே! நீ ஏற்கனவே பிறவா உன்னத நிலையில் இருக்கிறாய்! இதை நீ அறிவதே இல்லை! இங்கு பரவெளியில் காணும் வடிவங்களும், நிகழ்வுகளும் நிஜம் என கொள்வதால் உனக்கு பிறப்பு,

Continue Reading

வணக்கம் ஜியெம்.! உலகத்திற்கும் அதன் நிகழ்வுகளுக்கும் முக்கியம் கொடுக்காமல், நான் ஏன் எனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

April 28, 2022 | 200 views |



ஜியெம்: உலகம் எங்கே உள்ளது? உன்னுடைய நான் எனும் இருப்பில் தான்..... உடலும், மனமும், உலகமும், அனைத்து காட்சிகளும் தோன்றுகிறது. இந்த நான் எனும் இருப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. உன்னுடைய இருப்பின் அமைதியில்.....அனைத்தும் தோன்றுகிறது.. இதை அறிந்தால் முதலில் உன் இருப்புக்கு

Continue Reading

வணக்கம் ஜியெம்.! இந்த உள்ளார்ந்த பயணத்தில் புரட்சி என்று எதை கூறுவீர்கள்?

April 23, 2022 | 204 views |



ஜியெம்: புரட்சி என்று எதை கூறுகிறாய்? புரட்சி என்பது இருப்பதை ஒப்புக் கொள்ளாமல் ஒரு மாற்றத்தை கொண்டு வருவது அல்லவா? இங்கு கேள்வி: உள்ளார்ந்த பயணத்தில் புரட்சி என்று எதை சொல்வது? உன் உண்மை நிலை விளக்க முடியாதது! வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது!

Continue Reading

வணக்கம் ஜியெம்.! இந்த அகப்பயணத்தில் நம் உடலை துன்புறுத்திக் கொண்டுதான் உண்மையை அறிய வேண்டுமா?

April 21, 2022 | 214 views |



ஜியெம்: சுயம் உள்ளே உள்ளது! சுயத்தின் அறிவில் ' நான் எனும் இருப்பில் பரவெளியில், அனைத்து நிகழ்வுகளும் தானாகவே நிகழ்கிறது தற்போது! உடல் எனும் வடிவம் எங்கு நிகழ்கிறது? நான் எனும் சுய அறிவில் தானே? காணும் வடிவங்கள் அனைத்தும் உன்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! தன் சுய இருப்பை எந்த ஆதாரத்தின் மூலமாக அறியலாம்?

April 16, 2022 | 183 views |



ஜியெம்: சுய இருப்பு என்பது என்ன ?  நான் என்பது எது?  என அறியாததால் இக்கேள்வி! இங்கு நான் என்பதே உன் சுய இருப்பு தானே! உறக்கத்தில் உன் இருப்பு அறியப்படுவதில்லை! விழிப்பில் உன் இருப்பை அறிகிறாய்! நீ இருப்பது விழிப்பில்

Continue Reading