" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், நிழல், நிஜம் புரிகிறது. நிழல் வாழ்வில் விவகாரம் செய்ய வேண்டியுள்ளது. நான் இருப்பாக, உணர்வாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தாலும், அதன், அதன் இயல்பாக செயல்படட்டும் என்று நினைத்தாலும், தலையிட்டு அதை நிவர்த்தி செய்ய வேண்டிய காரியத்தில் இறங்கவேண்டிய சூழ்நிலை வந்தாலும், நான் ஆகிய இந்த பொய் உடல், மனம் பொய்யான கர்மத்தை செய்ய வேண்டியது உள்ளது. செயலற்று இருக்க சூழ்நிலை இடம் தர வில்லை. இந்நிலையில் (நான்) எப்படி செயல்படுவது? (எனது அறிவும் செயலும் முரண்படுகிறது) விளக்க வேண்டுகிறேன்.

August 12, 2022 | 235 views |



ஜியெம்: இக்கேள்வி முற்றிலும் தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. 'நான் ஆகிய இந்த பொய் உடல், மனம் பொய்யான கர்மத்தை செய்ய வேண்டியுள்ளது'...... என்று சொல்லப்படுகிறது.... இங்கு நான் என்பதே சுய அறிவு தான்! ('I am ness' is Consciousness )

Continue Reading

வணக்கம் ஜியெம், எல்லையற்ற அறிவு – இந்த பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நீக்கமற வியாபித்து இருக்கிறது. அதற்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. இந்த பரப்பிரம்மம் என்பது ஒன்றா அல்லது வெவ்வேறானதா?

August 9, 2022 | 256 views |



ஜியெம் : எல்லை அற்ற அறிவு உன்னில் இருந்து தனித்து இல்லை. உன்னுடைய நான் எனும் இருப்பில் தான் பிரபஞ்சம், மற்றும் அனைத்து வடிவங்களும் நிகழ்கிறது தற்போது! இந்த நான் எனும் அறிவு தன்னை வடிவமாக ஒப்புக் கொள்கிறது ஆரம்ப நிலையில்...!

Continue Reading

ஜியெம், நான் ஏன் எப்போதும் அவசரத்துடனும், படபடப்பாகவும் உள்ளேன்?

August 6, 2022 | 247 views |



ஜியெம்: இங்கு ' நான் ' என எதை நீ ஒப்புக் கொள்கிறாய்? வடிவம் தான் நீயா? எனில் வடிவம் எவ்வாறு அறியப்படுகிறது? வடிவம் எப்படி இயங்குகிறது? வடிவம் எதில் தோன்றுகிறது? வடிவம் நீ என்றால், வடிவத்தின் இயக்கமும் நீயா? இயக்கமும்

Continue Reading

வணக்கம் ஜியெம், விழிப்புணர்வு நிலை அறிந்த உடன், அறியாமையில் உள்ளவர்களை விழிப்புணர்வு நிலையில் உள்ளவர் எவ்வாறு அவர்களுக்கு உணர செய்வார். தான் உணர்ந்ததை பகிர முடியாமல் போகும்போது என்ன நிகழும் ?

August 2, 2022 | 248 views |



ஜியெம்: விழிப்பில்.... உணர்வுகள் நிகழ்கிறது. உணர்வுகள் நீ அல்ல! இந்த விழிப்பு (consciousness) தன்னை அறிதல், தன் முழுமையை (Absolute, wholeness) அறிதல் அவசியமாகிறது. தன் முழுமை அறிந்து ஆனந்தத்தில், அமிர்த நிலையில், நிலை கொண்ட குரு அமைதியாகவே இருப்பார். அமைதியை

Continue Reading

வணக்கம் ஜியெம், கனவு கலைந்ததும் கனவில் வரும் விஷயங்கள் அனைத்தும் அர்த்தமற்ற போவது போல, இந்த விழிப்பும் ஒரு கனவே என அறிவு பூர்வமாக அறிந்தும், இந்த விழிப்பும் கலைந்து, விழிப்பில் வரும் அனைத்து விஷயங்களும்அர்த்தமற்று போவதில்லயே ஏன்? எங்கு நான் தவறவிடுகிறேன்?

August 2, 2022 | 227 views |



ஜியெம்: விழிப்பு என்றால் என்ன? அமைதி நிலையில் தன் இருப்பை அறிவது.....! அமைதி நிலையில் உன் இருப்பை நீ அறிந்தால் உன் அறிவு விழிக்க ஆரம்பித்து விட்டது. விழிப்பு என்பது கண்களை திறந்து பார்த்தல் அல்ல...! கண்களை மூடி அமைதியில் தன்

Continue Reading

வணக்கம் ஜியெம், தன்னை அறிவதன் மூலம் முன்கூட்டியே அனைத்தையும் அறிய முடியுமா?

July 26, 2022 | 210 views |



ஜியெம்: இக்கேள்வி, தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. சுய அறிவில் நிலைத்தால், இங்கு அனைத்தும் தானாக நிகழ்கிறது என அறிந்தால், இக்கேள்வி எழாது. நிகழ்பவை அனைத்தும் தானாகவே நிகழ்கிறது...! எந்த நிகழ்வும் நிஜம் இல்லை எனில்... எந்த நிகழ்வை முன் கூட்டியே அறிய

Continue Reading