" நீயே பரிபூரண நித்தியம் "

கே: ஜியெம் வணக்கம். மாற்றத்துக்கு உட்படும் அனைத்தும் அநித்யம் என்று நன்றாகத் தெரிகிறது. இதில் மாறாத நான் தனித்து இயங்குவது எவ்வாறு? மேலும் நான், நானாக மாறாமல் இருக்கும் நிலை எப்படி எல்லா கால, தேசங்களிலும் சாத்தியம். தயவு செய்து எனக்கு புரியும் படி சொல்லுங்கள்.

October 11, 2024 | 19 views

ஜியெம்:
இங்கு நான் என்பது எது?

இக்கேள்வி எவ்வாறு கேட்கப் படுகிறது?

மாறாத தனித்த நான் என்பது எது?

மாற்றத்துக்கு உட்படும் அனைத்தும் அநித்யம் என்று எவ்வாறு தெரிகிறது?

உன் வடிவமும், காணும் அனைத்து வடிவங்களும் எங்கே உள்ளது தற்போது?

விழிப்பு நிலையில் ‘நான்’ எனும் இருப்பு சுயமாகவே அறியப்படுகிறது!
இந்த ‘ நான் ‘ எனும் அறிவு விழிப்பு நிலை முழுவதும் உள்ளது.

விழிப்பு நிலையில்,’ நான் ‘ எனும் சுய அறிவு அறியப்படுகிறது தானாகவே எவ்வித முயற்சியும் அன்றி….!

உறக்க நிலையில் ‘ நான் ‘ எனும் அறிவு மறைகிறது… உன் இருப்பை அறிவதில்லை.

முதலில் நான் எனும் உன் இருப்பை ,
சுய அறிவை அறிகிறாய்.!

நான் என்பது வார்த்தை அல்ல!

வார்த்தைகளுக்கு முந்தைய அமைதி நிலை!

கண் மூடி உள்ளே காணும் அசைவற்ற அமைதியே ..நான் எனும் சுய அறிவே, கண் விழித்து , இப்பர வெளியில் காணும் அனைத்து வடிவங்களுக்கும் , கோள்கள், அண்டம், அகிலம்,பிரபஞ்சம் மற்றும் அனைத்து படைப்புகளின் ஆதாரம்…!

நான் எனும் சுய அறிவில் அனைத்தும் தோன்றி மறைகிறது தற்போது!

நான் என்பது வார்த்தை அல்ல மாறுவதற்கு!

நான் என்பது வார்த்தைகளை கடந்த அமைதி நிலை!

தன் இருப்பை தானே நேரடியாக அறியும் நிலை!

உன் இருப்பை நீயே நேரடியாக அமைதியில் அறியும் போது….

நீ அனைத்தில் இருந்து விடுபடுகிறாய் தற்போதே!

கே: நான்..நானாக இருக்க மாறாமல் இருப்பது எப்படி சாத்தியம்?

நான் என்பது பொருள் அல்ல
மாறுவதற்கு!

நான் என்பது மாற்றமில்லா அமைதி!

பொருள் தானே மாறும்?

அமைதி மாறுமா?

மாறுவது அமைதியாகுமா?

கே: நான், நானாக மாறாமல் இருக்கும் நிலை எப்படி எல்லா கால தேசங்களிலும் சாத்தியம் ?

உள்ளிருக்கும் அமைதியே தற்போதைய ‘ நான் ‘ எனும் சுய அறிவு!

கண்களை மூடவும்!
அறியவும் அமைதியை!

இந்த அமைதியே எப்போதும் உள்ளது எனில் …இந்த அமைதியில் சுயமாக உன் இருப்பை அறிகிறாய் எனில்…

இந்த அமைதியில் உன் ‘ நான் ‘ எனும் சுய அறிவில்…
அனைத்து காலங்களும் , தேசங்களும் , பொருட்களும்,
தற்போது தோன்றி மறைகிறது எனில் …

மாறுகிற எந்த காலம்,தேசம்…. உனை உன் அமைதியான இருப்பை…
நான் எனும் சுய அறிவை பாதிக்கும்?

அறியவும்!
இருப்பது ‘ நான் ‘ எனும் சுய அறிவு ( I am ness’ Consciousness).

இந்த நான் எனும் சுய அறிவில் அனைத்தும் தோன்றி மறைகிறது தற்போது!

நான் எனும் அமைதி அப்படியே மாறாமல் உள்ளது….!

அமைதிக்கு மாற்றமில்லை!

நான் என்பது வடிவம் அல்ல!

எல்லை அற்ற உன் இருப்பே!

கண்களை மூடி அறியவும்
சலனமற்ற அமைதியை!

மாற்றமில்லா அமைதியை!

இந்த எல்லை அற்ற அமைதியே!தற்போது ‘ நான் ‘ எனும் இருப்பு.

எல்லை அற்ற ‘ நான் ‘ எனும் இருப்பில்…. காலம், நேரம் , பொருட்கள், வடிவங்கள், அண்டம் ,கோள்கள், பிரபஞ்சம், அகிலம் அனைத்தும் தற்போது தோன்றி மறைகிறது.

நான் எனும் இருப்பே காணும் அனைத்திற்கும் ஆதாரம் எனில் எது உனை பாதிக்கும்?

நான் என்பது வடிவமோ, பெயரோ மற்றும் திணிக்கப்படும் எவ்வித அடையாளங்களும் அல்ல!

நான் என்பது உள்ளிருக்கும் பூரண அமைதி!

பூரண அமைதியில் நிலைத்து அறியவும் உன் தற்போதைய இருப்பை!

அறிந்த பின் அறிவாய் …… இங்கே காணும் அனைத்தும் தோன்றி மறையும் கனவே என!

அறிவாய் அமைதியை முதலில்!

அறியப்படும் இருப்பில் ஆனந்தமே!

அடையாளங்கள் நீ அல்ல!

கால, தேசமும் நீ அல்ல!

அமைதியும் ஆனந்தமும் உன் பூரண அமைதியில் அறியப்படும் தொடர்ந்து….!

அமைதியில் நிலைத்து அறியவும் தற்போது!

🪷🦚🪷