" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், ஞானமடைதல் என்றால் என்ன?

May 31, 2023 | 73 views

ஜியெம்:

ஞானத்தை அடைய முடியாது.
ஏனெனில்,  நீ ஏற்கனவே, ஞானமாகத் தான் இருக்கிறாய்.

ஞானம் என்பது அமைதியில் தன் இருப்பை அறிவது.

ஞானம் என்பது வார்த்தை களுக்கு அப்பாற்பட்டது.

எல்லையற்ற , வடிவமற்ற உன் இருப்பே ஞானம்.

தான் வடிவம் அல்ல, சுய அறிவே என அறிதல், ஞானம் அறிதல்……!

ஞானத்தை அறியலாம்…. அடைய முடியாது.

உன் சுய அறிவில் உன் இருப்பு அறியப்படுகிறது.

உன் சுய அறிவில் தான் இங்கு அனைத்தும் நிகழ்கிறது.

உனது சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என அறிவதே ஞானம்.

தன் இருப்பில் இருந்தே காணும் காட்சிகள் அனைத்தும் நிகழ்கிறது என அறிவது ஞானம்.

எல்லையற்ற தன் படைப்பாற்றலை அறிவதே ஞானம்.

வடிவங்கள் தானல்ல என அறிவதே ஞானம்.

வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதே ஞானம்.

அமைதியின் ஆற்றலை அறிவதே ஞானம்!

அமைதியில் தன் இருப்பை சுயமாக அறிவதே ஞானம்.

உன் சுய அறிவு, நான் இருக்கிறேன் எனும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அமைதியில் தன்னை அறிவதே ஞானம்.

சுய அறிவே ஞானம்.!

சுய அறிவிற்கு அப்பால் எதுவுமில்லை இங்கே !

இந்த எல்லையற்ற, வடிவமற்ற தன் இருப்பை அறிதல் – சுய அறிவு எனப்படுவது.

தற்போதே நீ சுய அறிவில் தான் இருக்கிறாய்.

உன் சுய அறிவில் (consciousness) தான் அனைத்தும் தோன்றி மறைகிறது.

உன் சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை!

இதை அறியவும்.

உன் சுய அறிவில் (Consciousness) தான் அனைத்தும் நிகழ்கிறது தற்போது!

வடிவத்திற்கு அப்பாற்பட்ட சுய அறிவு, முதலில் தன்னை வடிவமாக ஒப்புக் கொள்கிறது.

பின்னர் , தன்னை அறிந்த குருவை பார்த்த பின், கண்களை மூடி , அமைதி நிலையில் தன் இருப்பை அறிகிறது.

தன் இருப்பை அமைதியில் அறிவதே  தன்னில் இருந்தே அனைத்தும் தோன்றி மறைகிறது, தனக்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை இங்கே எனும் போது இங்கு தனித்த அடையாளங்கள் ஏது?

அனைத்தும் சுய அறிவில் ( Consciousness) சுய அறிவால் என அறிவதே ஞானம்.

சுய அறிவில் அனைத்தும் ஒன்றே!

தனித்து ஏதுமில்லை!

இங்கு தனித்த அடையாளம் இல்லாத போது , யார், ஞானம் அடைவது?

ஞானம் என்பதுவும் கனவு தான்!

இங்கு உன் சுய அறிவில் நிகழும் அனைத்தும் கனவு தான்!

பார்ப்பவர் ஞானத்திற்கும் அப்பால்!

எனவே, ஞானம் ( consciousness) என்பது ஆரம்பமே அன்றி முடிவல்ல!

இந்த சுய அறிவு (Consciousness) தன் ஆதாரத்தை (source)அறிதல் அவசியம். அப்போது தான் கனவில் இருந்து விழித்து தன் பிறவா நிலையை அறிய முடியும்!

சுய அறிவு தன் ஆதாரத்தை, நித்தியத்தை (Awareness) அறிந்தவுடன் முழுமை அடைகிறது. பரிபூரணத்தை அறிகிறது.