ஜியெம்: உண்மை என்பது என்ன?
எப்போதும் மாறாதது அல்லவா?
எப்போதும் மாறாதது இங்கு எது என அறிவதே முதல் பணி!
மாறுவது எதுவும் உண்மை இல்லை எனில், இங்கே உனக்கு என்ன பணி இருக்கிறதாக ஒப்புக் கொள்கிறாய்?
நீ காணும் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது அதிவிரைவில் தற்போதே!
இதை நீ சற்றும் அறியாய்!
நீ ஈட்டும் பொருள் அனைத்தும் அன்றாட வாழ்க்கை தேவைக்கு மட்டுமே!
பொருள் சார்ந்த பணிகள் தானாகவே நிகழ்கிறது.
கே: உண்மையிலேயே இங்கு என் பணி எது என்பதே!
காணும் அனைத்தும் பிரபஞ்சம், அகிலம், அனைத்து உயிரினங்களும் எங்கே உள்ளது?
நான் எனும் சுய அறிவில் தானே?
முதலில் அனைத்திற்கும் வித்தான நான் எனும் இருப்பில் அமைதியில் தங்குவதே உனது பணி தற்போது!
இந்த அமைதியில் நிலைக்க எங்கேயும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை!
இருக்கும் இடத்திலேயே கண்களை மூடி கவனித்தால் அமைதி அறியப்படும். உன் இருப்பும் அறியப்படும் வார்த்தைகள் அற்ற நிலையில்!
காலை எழுந்தது முதல் உறங்கும் வரை (waking state ) முழுவதும் கண்களை திறந்த நிலையில் பார்த்து, காண்பது அனைத்தும் நிஜம் என மயங்குவதை விட்டு சற்றே கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியில் நிலைக்கவும்!
அமைதியில் நிலைத்து, பிறகு கண்களை விரித்து பார்க்கும் போது காணும் காட்சிகளும் அமைதியாகவே பார்க்கப்படும்!
கண்களை திறந்து பார்க்கும் போது ..
காட்சிகளில் தடுமாற்றம் !
கண்களை மூடினால்….
ஆனந்த அமைதி….
இதில் எது உண்மை?
சற்றே ஆராயவும்!
காட்சிகள் மாறுகிறது அதிவேகத்தில் தற்போது!
கண்களை மூடி காணும் போது அமைதி அறியப்படுகிறது!
காட்சிகள் வெளியே …..
மாறிக்கொண்டே இருக்கிறது…
தற்போது!
உள்ளே உள்ள அமைதியில் வடிவங்கள் இல்லை!
அமைதி அசைவற்ற நிலையில் ..
மாறா நிலையில் தற்போது !
இங்கே நீ அறிய வேண்டியது…
எது உண்மை என்பதே?
மாறும் மாற்றங்களா?
மாறா அமைதியா?
மாற்றங்கள் தானாகவே நிகழ்கிறது!
மாறுவது எதுவும் நீ அல்ல! என அனைத்து மாற்றங்களையும் மாறாமல் பார்க்கும் நிஜம் தற்போது உன் உள்ளே உள்ளது என்பதை அறிவதே உனது முதல் பணி!
அமைதியில் நிலைத்து….
அமைதியில் அறியப்படும் உனது இருப்பு …. தனது படைப்பான பிரபஞ்ச நிகழ்வுகளில் நிஜம் இல்லை என அறிவது உனது அடுத்த பணி!
இங்கு பரவெளியில் எதுவும் நிஜம் இல்லை எனில், உனது இருப்பு வெளியே பொழுதை வீணடிக்காமல்… உள்ளே தன் சுய இருப்பில் நிலைத்து தன் ஆதாரத்தை, முழுமையை அறிதல் அடுத்த பணி!
உன் சுயம் தன் ஆதாரத்தை , முழுமையை அறிந்தால் அறியப்படும் இங்கே எதுவும் பிறக்கவில்லை என!
இங்கே எதுவும் பிறக்கவில்லை எனில், உனது பணி என்ன?
பிறக்காத ஒன்றுக்கு என்ன பணி இருக்க முடியும் இங்கே?
சுய அறிவில் தோன்றும் அனைத்தும்… முற்றிலும் கனவே!
ஒரு துளி நிஜமும் இல்லை என அறிவதே முக்கிய பணி!
பிறப்பு, இறப்பு முற்றிலும் கனவே!
வடிவங்கள் அனைத்தும் கனவின் உள்ளே!
பார்க்கும் நீ நித்தியம், எல்லை அற்ற , விவரிக்க இயலாத அசைவற்ற உன்னதம் என அறிவதே உனது பணி!
பார்ப்பவர் யார் என அறியும் வரை …
பார்ப்பது நிஜமென ஒப்புக் கொள்ளும் உன் சுய அறிவு தனது பணி பொருள் ஈட்டுவதே என ஒப்புக் கொள்கிறது!
தன் முழுமையை அறிந்த குருவை பார்த்தபின்னர்…. பார்ப்பவரை அறிவதே தன் தலையாய பணி என அறிந்து…
உன் சுய அறிவு கண்களை மூடி பார்க்கும் நித்தியத்தை அறிகிறது!
பார்ப்பவர் பிறப்பில்லா நித்தியம்!
தான் பார்க்கும் நித்தியம்!
பார்க்கப்படும் அனைத்தும் முற்றிலும் கனவே என அறிந்தால் இங்கே என்ன பணி இருக்கு?
எவரும் பிறக்கவில்லை என்றால் பணி யாருக்கு?
வடிவ அளவில் தான் பிறந்ததாக ஒப்புக் கொள்ளும் உன் சுய அறிவு தன் பிறவா நிலையை அறியும் வரை….
கனவு நிலையில் பார்ப்பதில் மயங்காமல்…..
கண்களை மூடி… அமைதியின் வழியே…. காணும் கனவில் இருந்து விடுபடுகிறது.
இங்கு கனவு நிலையில் இருந்து விடுபடு வதே தலையாய பணியாகும்… தற்போது!
🌷🌹🌷