" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், நான் பார்ப்பவராக (Observer) இருக்க முயற்சிக்கின்றேன்…. ஆயினும் அது ஏராளமான கற்பனைகளுடன் முடிகிறது, விளக்கவும்.

March 17, 2023 | 82 views

ஜியெம்:

இங்கு ஏற்கனவே பார்ப்பவர் நீ தானே?

அப்படியிருக்க, உன்னால் எப்படி பார்ப்பவராக முயற்சிக்க முடியும்?

இது, ஒரு மலர், தான் மலர் ஆக முயற்சிப்பது போல தான்.

எதை நீ பார்ப்பவர் என்கிறாய்?

பார்ப்பவர் அமைதியாக பார்க்கிறார்.

பார்ப்பவர் வார்த்தைகளுக்கு முன்னே!

பார்ப்பவர் மொத்த படைப்புக்கும் முன்னே!

நிறைய கற்பனைகளோடு முடிந்ததாக கூறுகிறாய்!

கற்பனைகள் எதுவும் நீ அல்ல என அறிந்திடு!

கண்களை மூடவும்!

உன் இருப்பு இப்போது உனக்கே தெரிகிற தல்லவா?

இந்த இருப்பிலேயே தங்கவும்!

வார்த்தைகள் அற்ற நிலையில் தங்கி… பார்க்கவும்!

இந்த சலனமற்ற அமைதியில் தான் நான் எனும் சுய அறிவு ஆரம்பிக்கிறது

இந்த சுய அறிவிலே இருக்க எவ்வித முயற்சியும் தேவை இல்லை!

நான் இருக்கிறேன் எனும் உன் இருப்பு உனக்கு தெரியுமல்லவா?

இந்த உன் இருப்பு… வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட, சலனமற்ற அமைதியில்… தானாகவே தெரியும்.

உன் சுய அறிவை அறிய நீ முயற்சிக்க வேண்டியது இல்லை.

நடப்பது, உண்பது செயல்களுக்கு தான் முயற்சி தேவை.

ஏனெனில் இவை அனைத்தும் அசைவுகளே!

சலனமற்ற அமைதிக்கு எவ்வித முயற்சியும் தேவை இல்லை!

சலனமற்ற அமைதி அசைவுக்கு அப்பாற்பட்டது!

உன்னுள் இருக்கும் அமைதியை பார்க்க எவ்வித முயற்சியும் தேவை இல்லை!

முயற்சியற்ற நிலையில் பார்த்தல் நிகழ்கிறது!

எனவே பார்ப்பவர் முயற்சிக்கு முன்னே!

🍁💐🍁