ஜியெம்:
வடிவம் சார்ந்த அடையாளங்கள்.
உன் சுய அறிவானது, தன்னை ஒரு தனித்த வடிவமாகவும், அதன் மேல் திணிக்கப்பட்ட அடையாளங்கள் நிஜம் என உறுதியாக இருக்கும் வரை தொடர்ந்து கலக்கமுற்று, நிறைவற்றதாகவே இருக்கும்….
சுய அறிவு தன்னை அறிய ஆரம்பித்தவுடன்,அமைதியாக, சலனமற்று இருப்பதுடன், தன் முழுமையை அறிகிறது.
எனவே, வெளி நிகழ்வுகள், உன்னுள் இருக்கும் சுய அறிவை பாதிக்காது.
சுய அறிவு தன் இருப்பில் மையம் கொண்டால், அதற்கு வெளி நிகழ்வுகளால் பாதிப்பில்லை.
இந்த சலனமற்ற சுய அறிவு முழுமையாக தன் ஆதாரத்தில் ஒன்றிணையும் போது…
தனது உன்னத பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற்பட்ட நித்தியத்தை அறிகிறது.
தனது பிறவா நித்தியத்தை, இங்கு பார்ப்பது அனைத்தும் இருப்பின் பிரதிபலிப்பே யன்றி, நிஜம் அல்ல என அறிந்ததும், பாதிப்படைய இங்கு என்ன தேவை இருக்கிறது?
நான் ஏன் சுய அறிவில் நிலைத்து தன்னை அறிந்து கொள்ளல் அவசியமென அடிக்கடி வலியுறுத்துகிறேன்?
ஏனெனில், அப்போது தான் நீ முழுமையான ஓய்வில் இருக்க முடியும்.
🌷🌹🌷