விழிப்பே மருந்து!
உன்னுடைய நான் எனும் இருப்பில்தான்…..உடலும், மனமும், உலகமும், அனைத்து காட்சிகளும் தோன்றுகிறது.
இந்த நான் எனும் இருப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது!
உன்னுடைய இருப்பின் அமைதியில் அனைத்தும் தோன்றுகிறது.
இதை அறிந்தால் முதலில் உன் இருப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பாய்!
உன் இருப்பின்றி இங்கு யாதும் இல்லை!
இருப்பில் தோன்றும் வடிவங்களும் , காட்சிகளும் நீயல்ல!
இருப்பை அறியாததால், வடிவங்களும் காட்சிகளும் நிஜமாக உள்ளது.
முதலில் அறியவும் உன் உன்னத இருப்பை, அமைதியின் வழியே!
அசைவற்ற அமைதியே திறவுகோல்!
தன்னை தன் பரிபூரண நித்திய நிலையை… அறிவதற்கு!
பிறப்பு, இறப்பு, உடல் மனம் எனும் கனவினில் இருந்து விழிக்க….
இருப்பில் மையம் கொள்ளுதல் அவசியமானது.
விழிப்பே கனவின் தடுமாற்றத்திற்கு மருந்து…..!
இருப்பின் அமைதியில் விழிப்பு நிச்சயம்……!