ஜியெம்:
காலம் என்பது என்ன?
எங்கு உள்ளது?
மாறிக்கொண்டே இருப்பது காலம் என்றால் அது எவ்வாறு உண்மையாகும்?
கடந்த காலம் என்றால் என்ன?
எங்கு உள்ளது?
நினைவில் உள்ளது என்றால் நினைவு எங்கு உள்ளது?
கடந்தது உண்மையாகுமா?
அது தற்போது உள்ளதா?
உன் இருப்பு உனக்கு தெரியுமா?
எவ்வாறு அறிகிறாய் தற்போது?
சுய அறிவில் தானே, உன் இருப்பு அறியப்படுகிறது தற்போது!
உன் சுய அறிவில் தானே இங்கு அனைத்தும் நிகழ்கிறது தற்போது!
அனைத்து வடிவங்களும் அசைவுகளும் உன் சுய அறிவில் தற்போது நிகழ்கிறது!
காலம் என்பது அசைவே!
உன் சுய அறிவில் நிகழும் நிகழ்வுகளுக்கு ….காலம் என்ற ஒரு அடையாளம் கொடுக்கப்படுகிறது.
நிகழ்வுகள் மாறிக்கொண்டே இருக்கிறது அதிவேகத்தில் தற்போது.
நிகழ்வுகளின் அடிப்படையில், காலம் நிர்ணயிக்கப்படுகிறது…..
நிகழ்வுகளும், காலமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது இங்கே இப்புவியில்.
நிகழ்வுகள் எங்கே நிகழ்கிறது?
பர வெளியில்!
பரவெளி எங்கு உள்ளது?
உன் சுய அறிவில் !
சுய அறிவில், தானாகவே நிகழும் நிகழ்வுகளை…
மாறிக்கொண்டே இருக்கும் நிகழ்வுகளை…
பார்ப்பவர் யார்?
பார்ப்பவர் இல்லாமல் நிகழ்வுகள் இல்லை, நேரமும் இல்லை!
பார்ப்பவர் கால, நேரம் கடந்த நிலையில் தற்போது…..
பார்ப்பவர் சுய அறிவில் நிகழும் நிகழ்வுகளை… கண்டு கொள்வதில்லை.
பார்ப்பவர் காலம் நேரத்திற்கு அப்பால்!
பார்ப்பவர்க்கு இங்கு நிகழும் அனைத்தும் கனவே.
நிகழ்வுகள் கனவென்றால், நிஜம் இல்லை என்றால், எந்த நிகழ்வும், பாதிக்காது.
கால, நேரம் எங்கே உள்ளது?
பார்க்கும் நீ , கால, நேரம் கடந்த நித்தியம்!
கனவின் நிகழ்வுகளை நிஜம் எனகொள்வதால், காலமும் நிஜமாக தெரிகிறது உனக்கு!
விழித்தால் தெரியும் !
இங்கே! நித்தியத்தில், காலமும் இல்லை, நேரமும் இல்லை, நிகழ்வுகளும் இல்லை!
அமைதியும், ஆனந்தமும், முழுமை மட்டுமே உள்ளது என!
கே: இக்கணம் புதிதாய் பிறந்துள்ளோம்..இதை விளக்கவும்.
ஜியெம்: இங்கு எது பிறந்தது?
இங்கு நான் என்பது எது?
உன் சுய அறிவு தானே!
சுய அறிவில் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது… பிரபஞ்சம், கோள்கள், அனைத்து வடிவங்களும் உட்பட!
பிறந்தது வடிவங்களா?
வடிவங்கள் எங்கு நிகழ்கிறது?
தற்போது?
பர வெளியில் என்றால்,
பரம் எங்கு உள்ளது?
உன் சுய அறிவில் தானே!
உன் சுய அறிவில் அனைத்தும் படைக்கப்படுகிறது தானாகவே தற்போது !
உன் சுய அறிவில் தான் அனைத்தும் நிகழ்கிறது என நீ அறிவதே இல்லை!
தான் வேறு, தான் காணும் வடிவங்கள் வேறு என வடிவ அளவில் வித்தியாசப் படுத்தி கொண்டு இங்கு ஒரு விளையாட்டு தானாகவே நிகழ்கிறது.
வடிவம் எதனால் தோற்று விக்கப்படு கிறது?
என நீ அறியாய்!
உன் வடிவம் எவ்வாறு அறியப்படுகிறது?
சுய அறிவில் தானே?
சுய அறிவின்றி, வடிவம் அறியப்படுமா?
உறக்கத்தில் உன் இருப்பை நீ அறியாய்!
விழிப்பில், நான் இருக்கிறேன் என அறிகிறாய் இந்த வடிவம் வழியே!
உன் இருப்பு வடிவம் வழியே, சுய அறிவால் அறியப்படுகிறது.
சுய அறிவில் அனைத்து வடிவங்களும், உனது வடிவம் உட்பட தற்போது தானாக நிகழ்கிறது.
அனைத்து வடிவங்களும் உன் சுய அறிவில் தற்போது நிகழ்கிறது எனில் இங்கு பிறந்தது எது?
உறக்கத்தில் சுய அறிவும் இல்லை, வடிவங்களும் இல்லை!
தோற்றம் தான் பிறப்பு என்றால்,உறக்கத்தில் தோற்றம் மறையும் போது இறப்பு நிகழ்கிறதா?
அப்படி எனில், இந்த வடிவம் அதிவேகத்தில் தோன்றி மறைகிறது தற்போது…. ஒவ்வொரு அணுக்களும், தோன்றி மறைகிறது அதி வேகத்தில்.
தோன்றி மறைவது நிஜமாகுமா?
நீ பர வெளியில் காணும் தோற்றங்கள், ஒளியின் பிரதிபலிப்பே!
பிரதிபலிப்பு நிஜம் ஆகுமா?
இங்கே எது நிஜம்?
இதை அறியவே, உன் சுய அறிவு கண்களை மூடி உள் நோக்கி கவனித்து, அமைதியில் நிலைத்து தான் ஒளியே, பிரதிபலிப்பு அல்ல என அறிகிறது.
ஒளியின் பிரதிபலிப்பே காணும் வடிவங்கள் அனைத்தும் எனில் இங்கு எது பிறந்தது?
பிறப்பு நிஜமா?
கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியில் நிலைத்து அறியவும்.
நான் எனும் இருப்பில் பர வெளியில் நிகழும் பிரபஞ்சம், கோள்கள், அகிலம், அனைத்து வடிவங்களும் தோன்றி மறையும் கனவே !
இங்கு பிறந்தது… கனவு…மறைவதும்…..கனவே!
அமைதியில் நிலைத்தால், அனைத்தும் அறியப்படும்!
பிறப்பும் இறப்பும் கனவே என அறியப்படும் வரை அனைத்தும் நிஜமாகவே தோன்றும்!
சுய அறிவு தன் ஆதாரத்தில் நிலைத்து, தன் முழுமையை, பரிபூரணத்தை அறியும் போது, பிறப்பு இறப்பு எனும் கனவில் இருந்து விழித்து கொள்கிறது முழுமையாக!
பிறப்பும், இறப்பும் கனவே!
நிஜம் அல்ல!
பார்க்கும் நீ, நித்தியம்!
கனவிற்கு அப்பால் என அறிதல் அவசியமாகிறது.