ஜியெம் :
கண்டிப்பாக முயற்சிப்பதே வீண்தான்!
ஏனெனில், உன் எல்லை அற்ற இருப்பு உனக்கு தெரிவதே இல்லை.
உன்னை ஒரு சிறு வடிவமாகவே ஒப்புக்கொள்கிறாய் தற்போதும்!
எனவே தான் இக்கேள்வி!
நீ ஏற்கனவே மாபெரும் உன்னத நிலையில் இருக்கிறாய்!
ஆயினும் இதை அறிவதே இல்லை.
நீ காணும் வடிவம் தான் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ளது.
பார்க்கும் நீயோ எல்லை அற்ற ஒன்று.
பார்ப்பவர் நீ என அறியாததால், உன்னை அடைய முயற்சிக்கிறாய்!
இது ஒரு மலர் தான் மலர் ஆக முயற்சிப்பது போன்றது.
எல்லையற்ற ஒன்றாகிய தன்னை அறிய எவ்வித முயற்சியும் தேவை இல்லை!
செயலற்ற , முயற்சியற்ற நிலையில் நீயே எல்லை அற்ற அந்த ஒன்று என அறிவாய் தற்போது!
தன்னை அறிவாயெனில், முயற்சிப்பது வீணே எனவும் அறிவாய்!