ஜியெம்:
உன் சுய அறிவே இக்கேள்வியை கேட்கிறது!
இங்கு நான் என்பதே சுய அறிவு தான்!
வடிவம் அல்ல!
வடிவம் வாயிலாக தன் இருப்பை சுயம் அறிகிறது. இதுவே சுய அறிவு.
சுயம் என்பது ஒளி!
ஒளியில் தானாக அணுக்கள் தோன்றி, தொடர் வினையால் வடிவம் நிகழ்த்தி, தன் இருப்பை தற்போது வடிவம் வழியாக ‘நான் ‘ என அறிகிறது.
ஒளி தன் இருப்பை வடிவம் வழியாக அறிகிறது . இந்த நான் எனும் இருப்பு சுய அறிவு எனப்படுகிறது.
சுய அறிவு தன்னை வடிவமாகவே அடையாளம் கொள்கிறது, தன்னை அறிந்த குருவை காணும் வரை.
ஒளி தன் இருப்பை அறிவதில்லை!
அணுக்களின் தொடர் வினையால் தன் இருப்பை அறிகிறது.
அணுக்களின் தொடர் விளையாட்டே வடிவமும், தோற்றங்களும்…. அகிலமும், பிரபஞ்சமும், இங்கே!
அனைத்து படைப்பும் அணுக்களின் விளையாட்டில் நிகழ்கிறது தற்போது!
நான் என்பது தன் இருப்பை அறிவதே!
இங்கு தன் இருப்பை வடிவம் வழியாக அறிவதால், வடிவம் தான் “நான்” என ஒப்புக்கொள்கிறது.
தான் வடிவத்தை இயக்கும் எல்லை அற்ற சுயம் என அறிவதே இல்லை.
எல்லை அற்ற ஒன்று,
தன்னை ஒரு சிறு வடிவமாக ஒப்புக் கொள்வதால் தடுமாறுகிறது!
பிறப்பை போலவே தான் இறப்பதாகவும் ஒப்புக் கொள்கிறது.
கே: இந்த துன்பத்தை நான் எவ்வாறு களைவது?
இல்லாத ஒன்றை ஒப்புக் கொள்ளும் வரை தடுமாற்றம் தான்!
நீ வடிவம் அல்ல!
வடிவம் தான் ‘நான்’ என ஒப்புக் கொள்கிறாய்!
இதுவே தடுமாற்றத்திற்கு காரணம்.!
நீ பிறக்காத நித்தியம்!
ஆயினும் பிறந்ததாக ஒப்புக் கொள்கிறாய்!
பிறக்காத ஒன்றுக்கு இறப்பு ஏது?
ஆயினும் நீ இறப்பை கண்டு அஞ்சுகிறாய்!
நீ அல்லாத ஒன்றை உனதாக ஒப்புக் கொள்ளும் வரை தடுமாற்றமே!!
தடுமாற்றத்தில் இருந்து விடுபட ஒரே வழி, நீ வடிவம் அல்ல!
வடிவத்திற்கு முன்பே உள்ள எல்லை அற்ற சுய அறிவே என அறிதலே!
கண்களை மூடி அமைதியில் நிலைத்து இதை அறியலாம்.
அமைதியில் நிலைத்தால், நீ காணும் அனைத்தும் உள் ஒளியின் பிரதிபலிப்பே…என அறியலாம்!
கே: சுய அறிவின் நோக்கம் தான் என்ன?
சுய அறிவின் நோக்கமே,
தன்னை அறிதல்!
தன் முழுமையை அறிதல்!
தன் ஆதாரத்தை அறிதல்!
தன் பிறவா உன்னத, நித்திய பரிபூரணத்தை அறிதல்!
தன் முழுமையை அறியும் வரை அனைத்தும் நிஜம் என வடிவ அளவில் தடுமாறுகிறது!
முழுமையை, பிறவா நிலையை அறிந்தால், தொடர் ஆனந்தமே!
சுய அறிவே…..! அறியவும்….. தற்போதாவாது… உன் முழுமையை!
விழிக்கவும்!
சுய அறிவில் நிலைத்து!
அறியவும் உன் ஆதாரத்தை!