" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், இங்கு அனைவரையும் இயக்குவது எது?

September 9, 2022 | 127 views

ஜியெம்: இங்கு அனைவரும் எங்கு இருக்கிறார்கள்?

உன் சுய அறிவில் தானே?

உன் சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என நீ அறிவதே இல்லை.

ஏனெனில், உன்னை ஒரு தனித்த வடிவமாகவே அடையாளம் கொள்கிறாய்!

வடிவம் எதில் தோன்றுகிறது?

உன் சுய அறிவில் தானே?

உன் சுய அறிவின் ஆற்றலை நீ அறியாய்!

சுய அறிவானது
எல்லை அற்றது!
வடிவம் அற்றது!

அனைத்து வடிவங்களையும் படைக்கும் ஆற்றல் கொண்டது.

தற்போது நீ காணும் அனைத்தும்,

உன் சுய அறிவால் தானாகவே நிகழ்கிறது!

இங்கு செய்பவர் யாரும் இல்லை!

அனைத்தும் சுய அறிவால் தானாகவே நிகழ்கிறது!

சுய அறிவே  அனைத்து வடிவங்களையும் படைத்து அவற்றின் வழியாக செயல் படுகிறது!

சுவாசம், இதயத்துடிப்பு, செரிமானம்,வளர் சிதை மாற்றங்கள், அணுக்களின் தொடர் வினைகள், அனைத்து அசைவுகளும், இயக்கங்களும், சுய அறிவால் தானாகவே நிகழ்கிறது!

உன் சுய அறிவில் காண்கிற பிரபஞ்சம், அகிலம், கோள்கள், அனைத்து உயிரினங்கள், ஒட்டு மொத்த படைப்பும் …. சுய அறிவால் இயங்குகிறது தற்போது!

உன் சுய அறிவே

இங்கு அனைத்தையும் படைத்து இயக்குகிறது!

சுய அறிவின்றி இங்கு எதுவும் இல்லை!

எனில், சுய அறிவின் மகிமையை அறியவும்.

ஒரே வழி, கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியில் நிலைத்து இருத்தலே!

இந்த அமைதி சுய அறிவின் ஆரம்பமே!

பிரபஞ்ச ஆற்றல் இதில் பொதிந்துள்ளது.

அமைதியில் நிலைத்தால், அறியலாம்!

தன் அபரிதமான ஆற்றலை!