ஜியெம்:
இக்கேள்வியை கேட்பதே உன் சுய அறிவு தான் !
உன் சுய அறிவு வடிவங்களுக்கு அப்பாற்பட்டது !
ஆயினும் தன்னை வடிவமாகவே ஒப்புக் கொள்கிறது.
தான் வடிவம் என ஒப்புக் கொள்வதால், தன் பிறப்பை ஒப்புக் கொள்கிறது.
பிறப்பை ஒப்புக் கொள்வதால், இறப்பையும் ஒப்புக் கொள்கிறது.
தான் சுய அறிவு என்றும் தன்னில் வடிவங்கள் தானாகவே தோன்றி, தானாகவே மறைகிறது என்றும் அறிவதே இல்லை!
தன் ஆற்றலை, வடிவத்திற்கு அப்பாற்பட்ட ஆற்றலை அறிவதே இல்லை!
தன்னை வடிவமாகவும், அடையாளங்களாகவும் ஒப்புக் கொள்வதால், தான் பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற்பட்ட உன்னத நித்தியம் என அறிவதே இல்லை ,
தன்னை அறிந்த குருவைக் காணும் வரை !
‘நீ இந்த வடிவம் அல்ல!
வடிவம் சார்ந்த அடையாளங்களும் அல்ல!
நீ பிறக்கவுமில்லை!
பிறக்காத ஒன்றுக்கு ஏது இறப்பு?
உன் பிறவாத, உன்னதத்தை அறியவும்! என்ற குருவின் போதனையை கேட்ட பின், சுய அறிவு விழிக்க தொடங்குகிறது அமைதியில் நிலைத்து.
தொடர் அமைதியில் நிலைத்து தன்னுள் ஒளியை காண்கிறது.
பின்னர், தான் காண்பது அனைத்தும் ஒளியின் பிரதி பலிப்பே, நிஜமல்ல என அறிகிறது.
ஒளியில் பிரபஞ்சம், கோள்கள், புவி மற்றும் அனைத்து உயிரினங்களும்,தானாக தோன்றி மறைகிறது!
ஒளியே இங்கு அனைத்தையும் படைத்து, சுய அறிவில், வடிவ அளவில் காணும் அனைத்தும் நிஜம் என ஒப்புக்கொள்கிறது.
பிறப்பு,இறப்பு உட்பட!
தொடர் அமைதியில் நிலைத்து தன்னைக் கடந்து, தன் ஆதாரத்தில் நிலைத்து…
தனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!
தான் இருந்து கொண்டே இருக்கிற, தூய, மாற்ற மில்லாத, எல்லையற்ற நித்தியம் என தன்னை அறிகிறது!
முதலில், தன்னை வடிவமாகவும், தனக்கு பிறப்பு, இறப்பு உண்டு என ஒப்புக்கொண்ட சுய அறிவானது, தன்னை அறிந்த குருவின் போதனைகளை அமைதியில் கவனித்து, தன் பிறவா நிலையை, பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற்பட்ட நித்தியத்தை அறிகிறது.
இதுவே தன்னை அறிதல்!
சுய அறிவே தன்னை , தன் முழுமையை அறிகிறது!
சுய அறிவு, வடிவ அடையாளத்தில் , முழுமை அற்ற நிலையில் பிறப்பு ,இறப்பு எனும் கனவை நிஜம் என ஒப்புக்கொண்டு தடுமாறுகிறது.
வடிவ அளவில் முழுமையுறாத சுய அறிவானது , தன்னை, தன் ஆதாரத்தை அறிந்து, பிறப்பு, இறப்பு எனும் கனவில் இருந்து விடுபட்டு விளக்க முடியாத ஆனந்த அமிர்த நிலையில், தன் முழுமையை அறிகிறது!
தன்னை அறிதல் என்பது தன் முழுமையை அறிதலே!
இப்போதாவது அறியவும்…
உன்னை, உன் அற்புதத்தை! உன் முழுமையை!
எனது போதனைகள் அனைத்தும் இதை நோக்கியே எனவும் அறியவும்!