ஜியெம் : அடையாளங்கள் அனைத்தும் சார்புத்தன்மை உடையது.
அடையாளங்கள் அனைத்தும் பொருளுக்கே!
நீ பொருட்களுக்கு அப்பாற்பட்ட அற்புதம்!
தோற்றம் மறைவுக்கு அப்பாற்பட்ட உன்னதம்.
ஆரம்பமும், முடிவும் இல்லாத நித்தியம்.
இதை நீ அறிவதே இல்லை!
உன் இருப்பு எப்போது அறியப்படுகிறது?
உறக்கத்திலா? அல்லது விழிப்பிலா?
விழிப்பு எவ்வாறு நிகழ்கிறது?
என நீ அறியாய்!
நான் எனும் உன் இருப்பு விழிப்பு நிலையில், வார்த்தைகள் அற்ற நிலையில் அறியப்படுகிறது!
உன் இருப்பை நீ அறிகிறாய் எவ்வித முயற்சியும் இல்லாமலே!
உன் நான் எனும் இருப்பில் தான் பிரபஞ்சமும், அனைத்து தோற்றங்களும் நிகழ்கிறது தற்போது.
உன் வடிவம், உன் சுய அறிவில் நிகழ்கிறது தற்போது.
சுய அறிவின்றி, இங்கு படைப்பு ஏதும் இல்லை!
இந்த ‘நான் ‘ எனும் இருப்பு, சுய அறிவே தற்போது உனது அடையாளம்.
இந்த வடிவத்திற்கு, பல்வேறு அடையாளங்கள் (பெயர்கள், உறவு முறைகள், படிப்பு தகுதி, தொழிற்பெயர் கள்…) கொடுக்கப்படுகிறது.
அவையாவும் எவ்வாறு அறியப்படுகிறது?
உன் சுய அறிவில் தானே?
சுய அறிவே முதன்மை அறிவு…மாறுதல் அற்றது…..
ஏனைய அறிவு அனைத்தும் சுய அறிவில் பெறப்படுகிறது.
உன் சுய அறிவில் வடிவம் சார்ந்த பிற அறிவு பெறப்படுகிறது.
அவை நீ அல்ல!
மாற்றம் இல்லா ‘நான் ‘ எனும் சுய அறிவில் பெறப்படும் அடையாளங்கள் அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டவை!
மாறுகின்ற அடையாளங்கள் நீ அல்ல!
நீ மாற்றமில்லா, தூய நித்தியம்!
அடையாளங்கள் வடிவத்திற்கே!
அவை நீ அல்ல!
நீ பிறவாத, உன்னதம் என அறிதல் அவசியம்.
சுய அறிவில் நிலைத்து, அமைதியில் மூழ்கி, உன் நித்தி யத்தை அறியலாம்!
நான் எனும் சுய அறிவில் பிரபஞ்சமே பொதிந்துள்ளது.
நான் என்பது வடிவம் அல்ல!
எல்லை அற்ற உன் இருப்பே!
தற்போது , நான் என்பது சுய அறிவே!
இதை அறிந்து அமைதியில் நிலைக்கவும்!
பிற அடையாளங்கள் வடிவத்திற்கே!
அவைகள் அனைத்தும் உபயோகத்திற்கு மட்டுமே!
அவை நீ அல்ல என அறியவும் அமைதியில்!