" நீயே பரிபூரண நித்தியம் "

ஜியெம், நான் ஏன் எப்போதும் அவசரத்துடனும், படபடப்பாகவும் உள்ளேன்?

August 6, 2022 | 162 views

ஜியெம்:

இங்கு ‘ நான் ‘ என எதை நீ ஒப்புக் கொள்கிறாய்?

வடிவம் தான் நீயா?

எனில் வடிவம் எவ்வாறு அறியப்படுகிறது?

வடிவம் எப்படி இயங்குகிறது?

வடிவம் எதில் தோன்றுகிறது?

வடிவம் நீ என்றால், வடிவத்தின் இயக்கமும் நீயா?

இயக்கமும் நீ தான் எனில், மூச்சு விடுவது உன் முயற்சியால் உருவானதா?

இதயத் துடிப்பு உன் முயற்சியால் உருவானதா?

எந்த இயக்கம் உன் வடிவத்தால் உருவாகிறது தற்போது சொல்லவும்?

எந்த இயக்கமும் உன் வடிவத்தால், இல்லையெனில், வடிவம் எதனால் இயக்கப்படுகிறது?

முதலில், சொல்லவும்!

வடிவம் எங்கு உள்ளது?

நான் எனும் சுய அறிவில் தானே?

சுய அறிவின்றி வடிவம் அறியப்படுமா?

நான் என்பதே சுய அறிவு (Consciousness) தான் இங்கு!

முதலில் இதை அறியவும்!

சுய அறிவில் வடிவம், அகிலம், பிரபஞ்சம் அனைத்தும் தற்போது தானாகவே நிகழ்கிறது!

சுய அறிவே உன் வடிவத்தை படைத்து, வடிவம் வழியாக இயங்குகிறது எனில் இங்கே நீ பதட்டம் அடைய வாய்ப்பில்லை!

வடிவ அடையாளத்தில் தன்னை இணைத்து கொள்வதால், நான் எனும் சுய அறிவே தற்போது தடுமாற்றம் அடைகிறது…. பதட்டம் அடைகிறது….

கே: நான் ஏன் அவசரத்துடனும், படபடப்புடன் இருக்கிறேன்?

நான் என்பது எதுவென அறியாததால், இந்த அவசரம்… இத்தனை படபடப்பு!

இங்கு நான் என்பதே சுய அறிவு தான்!

அனைத்தும் சுய அறிவால் படைக்கப்பட்டு, சுய அறிவே அனைத்திலும் இயங்குகிறது எனில் இங்கு பதட்டம் அடைய அவசர கதியில் தடுமாற அவசியமில்லை!

முதலில் கண்களை மூடவும்!

உள்ளிருக்கும் அமைதியை அறியவும்!

இந்த அமைதியே பரவெளியில் காணும் அனைத்திற்கும் ஆதாரம் தற்போது என அறிந்தால், பதட்டம் ஏது?

அவசரம் ஏது?

சலனமற்ற அமைதியே தற்போது தன்னை வடிவமாக ஒப்புக் கொள்வதால், சலனமடைகிறது.

தன் உள்ளிருக்கும் அமைதியை அறிந்தவுடன், தான் சுய அறிவே தற்போது…இந்த வடிவம் உபயோகத்திற்கே…என அறிந்தவுடன், அமைதியில் நிலைக்கிறது.

நிதானமாக கவனிக்கிறது அனைத்து நிகழ்வுகளையும்!

நிகழ்வுகள் தானாகவே நான் எனும் சுய அறிவில் நிகழ்கையில், செய்பவர் இங்கு யாரும் இல்லை, செயல் மட்டுமே… 

அந்த செயல்களும் தானாகவே நிகழ்கிறது எனில்….

இங்கு உனக்கு என்ன வேலை?

அமைதியாக கவனிப்பதை தவிர!

நான் என்பது சுய அறிவே தற்போது !

அனைத்தும் சுய அறிவில், சுய அறிவால் தானாகவே நிகழ்கிறது என அறிந்தால்….

பரிபூரண அமைதியும், எல்லை இல்லா ஆனந்தமும் அறியப்படும்!

கண்களை மூடி அமைதியை அறிந்து….

அமைதியே சுய அறிவு!

இயங்குவது சுய அறிவே!

தனித்த அடையாளம் ஏதுமில்லை இங்கே என அறிந்தால்,

உன் சுய அறிவு தான் திணிக்கப்பட்ட அடையாளங்கள் அல்ல!

அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட எல்லை அற்ற சுய அறிவே என அறிந்தால், படபடப்பு அடங்கிவிடும்!

நிதானமாக, அமைதியாக அனைத்தையும் கவனிக்க ஆரம்பித்தால்…

இங்கு நிகழும் எதுவும் நிஜம் அல்ல! என அறிந்தால் நிஜம் அற்ற ஒன்று எவ்வாறு பாதிப்பை, படபடப்பை          ஏற்படுத்தும்?

சுய அறிவே தன்னை தனித்த அடையாளமாகவும், தான் காணும் அனைத்தும் தன்னில் இருந்து மாறுபட்டதாகவும் ஒப்புக் கொள்வதால் இருமை நிலையில் தடுமாறுகிறது….

தான் சுய அறிவே என்றும், இங்கு அனைத்தும் தன்னில் இருந்தே தோன்றி,

தன் சுய அறிவிலே மறைகிறது, தனக்கு அப்பால் எதுவும் இல்லை என அறியும் வரை….

தடுமாற்றமும், படபடப்பும்…..ஏற்படும்…..

தன்னை அறியாததால் …. படபடப்பு!

தன்னை, அறிந்தால் அமைதியும், ஆனந்தமும்….

இங்கேயே! தற்போதே!