" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், கனவு கலைந்ததும் கனவில் வரும் விஷயங்கள் அனைத்தும் அர்த்தமற்ற போவது போல, இந்த விழிப்பும் ஒரு கனவே என அறிவு பூர்வமாக அறிந்தும், இந்த விழிப்பும் கலைந்து, விழிப்பில் வரும் அனைத்து விஷயங்களும்அர்த்தமற்று போவதில்லயே ஏன்? எங்கு நான் தவறவிடுகிறேன்?

August 2, 2022 | 194 views

ஜியெம்:

விழிப்பு என்றால் என்ன?

அமைதி நிலையில் தன் இருப்பை அறிவது…..!

அமைதி நிலையில் உன் இருப்பை நீ அறிந்தால் உன் அறிவு விழிக்க ஆரம்பித்து விட்டது.

விழிப்பு என்பது கண்களை திறந்து பார்த்தல் அல்ல…!

கண்களை மூடி அமைதியில் தன் இருப்பை அறிவது!

உன் அறிவு………….. அமைதியில் நிலைத்து கவனிக்கும் போதே….

விழிக்க தொடங்குகிறது…!

தொடர் அமைதியில்….தொடர் கவனித்தலில்….

விழிப்பு நிச்சயம்…!

விழிப்பும் ஒரு கனவே என அறிவு பூர்வமாக அறிந்தும், இந்த விழிப்பு கலைந்து விழிப்பில் வரும் அனைத்து விஷயங்களும் அர்த்தமற்றது போவதில்லையே ஏன்? என்பது கேள்வி

விழித்த நிலை வேறு,

விழிப்பு நிலை வேறு….!

விழித்த நிலை என்பது கண்களை திறந்து காணு தல்……!

விழிப்பு நிலை என்பது உள்ளிருக்கும் அமைதி நிலையில் நிலைத்து இருத்தல்……!

கண்களை திறந்த விழித்த நிலையில் அனைத்தும் நிஜமாக தோன்றுகிறது.

கண்களை மூடிய அமைதி நிலையில் வடிவங்கள் இல்லை….

அமைதி மட்டுமே…!

இந்த அமைதியில் தான் பிரபஞ்சத்தின் ஆற்றல் எனும் வித்து உள்ளது.

இந்த அமைதியை உதாசீனப்படுத்தக் கூடாது.

இந்த அமைதியின் வழியே விழிப்பாக இருந்தால்…..

விழித்த நிலையில் காண்பதுவும்…..

கனவுதான் என அறியப்படும்…..!

இப்பொழுது தெரிகிறதா…

விழித்த நிலையில் காணும் காட்சிகள்…

விழிப்பு நிலையில் இல்லை யென….!