ஜியெம்:
ஆன்மீகம் என்பதே, தன்னை, தன் முழுமையை அறிதலே!
இங்கு நான் என்பது வடிவம் அல்ல!
சுய அறிவே (Consciousness)!
இந்த நான் எனும் சுய அறிவு தன்னை மாறும் வடிவமாக ஒப்புக்கொள்வ தால், தான் பிறந்ததாகவும், இங்கு நிகழும் அனைத்தும் நிஜம் என்றும், தனக்கு இறப்பு உண்டு என்றும் ஒப்புக்கொள் கிறது.
தான் அல்லாத ஒன்றை தனதாக ஒப்புக்கொள்வதால், தடுமாற்றம் அடைகிறது.
ஆன்மீகம் என்பதே தன்னை, தன் வடிவத்திற்கு அப்பாற்பட்ட, எல்லை அற்ற, பிறப்பும் இறப்பும் அற்ற உன்னதத்தை அறிவதே!
கேள்வி: இந்த ஆன்மீக பயணத்தில், முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
முதலில், கண்களை மூடவும்!
அமைதியை அறியவும்!
அமைதியில் வார்த்தைகள் அற்ற நிலையில் உன் இருப்பு அறியப்படுகிறது எனில், நீ தற்போது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று!
அமைதியில் எல்லைக் கோடுகள் இல்லை ஏனெனில், அமைதி என்பது பொருள் அல்ல!
அமைதி என்பது எல்லை அற்றது!
அமைதி பொருளை கடந்த அருள் நிலை!
காணும் அனைத்தும் அமைதியில் கரைந்து விடுகிறது!
பொருள்களின் மயக்கத்தில் விடுபட அருளில், அமைதியில் நிலைக்க வேண்டும்!
பொருட்கள் உபயோகத்திற்கு மட்டுமே என அறிந்து தேவைக்கு பயன் படுத்தி பொருட்களின் ஆளுமையில் இருந்து விடுபடவும்!
பொருட்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டால், எளிதாக கண்களை மூடி அமைதியில் அருள் நிலையில், எல்லை அற்ற ஆனந்தத்தை அறியலாம்!
வடிவ அடையாளத்தில் (personality) இருந்து விடுபட்டால், எளிமையாக உள்ளிருக்கும் அமைதியில் நிலைத்து தன் இருப்பை அறிந்து, தன் இருப்பின் மூலம் தன் ஆதாரத்தை அறிந்து…
தான் இந்த பரவெளியில் காணும் அனைத்தும் கனவே, நிஜம் அல்ல…!
பார்க்கும் நான் நித்தியம்!
எனக்கு பிறப்புமில்லை, இறப்புமில்லை!
என்றும் இருந்து கொண்டே இருக்கும் மாறா உன்னத நித்தியம் என அறியலாம்!
முக்கியமாக, தெரிந்து கொள்ள வேண்டியது
இங்கு காணும் எதுவும் நிஜம் இல்லை, கனவே என்பதே!
அதை விட முக்கியமானது கனவில் இருந்து விழித்தலே!
அதனினும் முக்கியமானது…
பார்க்கும் நான் நித்தியம் !
பிறவா ஒன்று!
இருமை அற்ற ஒன்று என அறிவதே!
அறிந்தால், பார்க்கின்ற இருமை (duality) நிலையில் பாதிப்பு இருக்காது!
இப்பொழுது அறிவாயா?
ஆன்மீக அறிதல் எவ்வளவு முக்கியம் என?