" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! சுய அறிவு (Consciousness) ஏன் தன்னை அறியாமல், பொருட்கள் மீதும், திணிக்கப்பட்ட கருத்துக்கள் மீதும் ஆர்வம் காட்டுகிறது?

June 4, 2022 | 198 views

ஜியெம்:

ஏனெனில், சுய அறிவு தன்னை ஒரு பொருளாகவே ஏற்றுக்கொள்கிறது.

தான், பொருட்களுக்கு அப்பாற்பட்ட, பொருட்களின் ஆதாரம் என்பதை அறியவே இல்லை.

சுய அறிவுக்கு தான் சுய அறிவு என்பதே தெரியாது.

அது தன்னை அறிவதே இல்லை.

சுய அறிவு, தன் இருப்பு…. வடிவத்துக்கு முன்பாகவே உள்ளது என அறியாமல், தன்னில் தோன்றும் வடிவமே தான் என ஒப்புக்கொள்கிறது.

இதுவே முதல் தவறாகும்.

சுய அறிவானது வடிவத்தை உபயோகிக்கிறது….ஆனால் இதை அறிவதே இல்லை.

தன்னை அறியாமலேயே இருப்பது எத்தகைய பரிதாபத்திற்குரியது?.

சுய அறிவு தான் இல்லையெனில் புவியும், மற்ற படைப்புகளும் இல்லை என்பதை அறிவதே இல்லை.

அறிந்திருந்தால்…..இவ்வாறு காணும் காட்சிகளில் மயங்குமா?

சுய அறிவானது தான், பொருட்களுக்கும், கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டது… என அறிவதே இல்லை!

சுய அறிவில் தான் வடிவங்கள் தோன்றி மறைகிறது .

சுய அறிவு இங்கேயே நிலைத்திருக்கிறது.

இதையும் சுய அறிவு அறியவே இல்லை.

சுய அறிவு தன்னை வடிவமாகவும், திணிக்கப்பட்ட அடையாளங்களாகவும் ஒப்புக்கொள்வதால், தான் சுயத்தை பற்றி அறிவதே இல்லை.

சுய அறிவு, திணிக்கப்பட்ட அறிவில் திருப்தி அடைவதால்….. அது விழிப்பதே இல்லை.

என்னுடைய போதனைகளை கவனித்த பின்னும் சுய அறிவு , திணிக்கப்பட்ட அறிவில் தடுமாறுவது வேடிக்கையே!

தன்னை அறிந்தவரால் மட்டுமே, சுய அறிவை விழிக்க வைக்க முடியும்!

எனது போதனைகளை கவனித்தும்….விழிக்கவில்லை எனில்….சுய அறிவு விழிப்பதற்கு தயாராக இல்லை என பொருள்.

அதுவரை, தன்னை அறியாமல் பொருட்கள் மீதும், திணிக்கப்பட்ட கருத்துக்கள் மீதும் ஆர்வம் காட்டுகிறது……

சுய அறிவு என்பது வார்த்தை அல்ல!

முதலில் இதை அறியவும்!

அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது!

அமைதியில், சலனமற்று நிலைக்கும் போது சுய அறிவு தன் அளவு கடந்த ஆற்றலை அறிய ஆரம்பிக்கிறது…..!