" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! உலகத்திற்கும் அதன் நிகழ்வுகளுக்கும் முக்கியம் கொடுக்காமல், நான் ஏன் எனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

June 1, 2022 | 194 views

ஜியெம்: உலகம் எங்கே உள்ளது?

உன்னுடைய நான் எனும் இருப்பில் தான்…..

உடலும், மனமும், உலகமும், அனைத்து காட்சிகளும் தோன்றுகிறது.

இந்த நான் எனும் இருப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

உன்னுடைய இருப்பின் அமைதியில்…..

அனைத்தும் தோன்றுகிறது..

இதை அறிந்தால் முதலில் உன் இருப்புக்கு முக்கியம் கொடுப்பாய்.

உன் இருப்பின்றி இங்கு யாதும் இல்லை!

இருப்பில் தோன்றும் வடிவங்களும் , காட்சிகளும் நீயல்ல!

இருப்பை அறியாததால், வடிவங்களும் காட்சிகளும் நிஜமாக உள்ளது.

தன் இருப்பை அமைதியில் அறிந்தால்……..

ஆனந்தம் அறியப்படும்.

முதலில் அறியவும் உன் உன்னத இருப்பை அமைதியின் வழியே!

அசைவற்ற அமைதியே திறவு கோல்!

தன்னை,  தன் பரிபூரண, நித்திய நிலையை ….. அறிவதற்கு!

பிறப்பு, இறப்பு, உடல், மனம் எனும் கனவில் இருந்து விழிக்க……

இருப்பில் மையம் கொள்ளுதல் அவசியமானது!

இருப்பின் அமைதியில் விழிப்பு நிச்சயம்!……

விழிப்பே கனவின் தடு மாற்றத்திற்கு மருந்து…..

உலக நிகழ்வுகளை நிஜம் என ஏற்கும் வரை கனவு தொடர்கிறது….

தன் இருப்புக்கு முக்கியம் கொடுத்து அமைதி நிலையில் நிலைக்கும் போது தன் உன்னதமான…

அழியா செல்வமான நித்தியம் அறியப்படுகிறது.

அறிந்தால் தொடர் ஆனந்தமே!

இப்பொழுது சொல்லவும் எது முக்கியம் என….