ஜியெம்:
நீ எப்போதும் பரிபூரணமாகவே இருக்கிறாய்!
இதை அறிவதே இல்லை!
எனவே இக்கேள்வி!
நீ பரிபூரணம்,
முழுமை!
பிறவா நித்தியம்!
உனக்கு ஒன்றும் நிகழவில்லை!
தற்போது காணும் அனைத்தும் எங்கே நிகழ்கிறது?
நான் எனும் சுய அறிவில் தானே?
உறக்கத்தில் உன் இருப்பு அறியப்படுவதில்லை!
முதலில் அறிவது உன் இருப்பை…
நான் எனும் உன் இருப்பே சுய அறிவில் தான் அறியப்படுகிறது தற்போது!
இந்த சுய அறிவு வடிவத்திற்கு அப்பாற்பட்டது!
எல்லை அற்றது!
இதை அறியாது உன் சுய அறிவு தன்னை ஒரு வடிவமாக ஒப்புக் கொள்கிறது!
வடிவத்திற்கு அப்பாற்பட்ட உன் சுய அறிவு தற்போது தன்னை ஒரு வடிவமாக ஒப்புக் கொள்வதால் தான் காணும் கனவினை உறுதிப்படுத்திக் கொள்கிறது… வடிவ அடையாளம் வழியாக!
ஏனெனில், இங்கு வடிவங்கள் அனைத்தும் கனவே!
கனவு எவ்வாறு முழுமை பெறும்?
நிஜம் அற்ற ஒன்று எவ்வாறு முழுமையுறும்?
கே: பூரணத்து வத்தை நான் எவ்விதம் பெறுவது?
பூரணத்துவம் என்பது பொருள் அல்ல! பெறுவதற்கு!
பூரணத்துவம் என்பது உன் உன்னத பிறவா நித்தியம்!
இது பொருளை கடந்த அருள் நிலை!
எல்லை அற்றது!
விளக்க முடியாதது!
உன் அற்புத நிலையை அறிவதற்கு செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை!
தற்போது உன் சுய அறிவில் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது வடிவ அளவில் !
என அறிதலும்,
நிகழும் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது!
தனித்த அடையாளம் ஏதுமில்லை இங்கே என அறிதலும் அவசியமாகிறது!
நிகழும் நிகழ்வுகளை அமைதியாக கவனித்தால் காணும் நிகழ்வுகளில் இருந்து தற்போதே விடுபடலாம்!
அனைத்து நிகழ்வுகளையும் ஒரு படம் பார்ப்பது போல அடையாளம் இன்றி பார்த்தால் காணும் கனவில் இருந்து விடுபடலாம் தற்போதே!
அடையாளத்துடன் காணும் போது கனவை நீ உறுதிப்படுத்துகிறாய்!
அடையாளம் அற்று பார்க்கும் போது கனவில் இருந்து விடுபடுகிறாய்!
உன் சுய அறிவு கண்களை மூடி உள் இருக்கும் அமைதியை அறியும் போது அனைத்தில் இருந்து விடுபடுகிறது.
கண்களை மூடி அமைதியை கவனிக்க ஆரம்பிக்கும் போது அறிகிறது இங்கே பரவெளியில் ….
காணும் அனைத்தும் தன் சுய இருப்பில் இருந்தே தோன்றுகிறது என!
காணும் அனைத்திற்கும் மையம், ‘நான் எனும் சுய அறிவே’ எனில், இங்கே நிகழ்கிற அனைத்தும் உள் இருக்கும்
ஒளியின் பிரதிபலிப்பே எனில் ,எதிலும் நிஜம் இல்லை எனில், எந்த நிகழ்வு உனை பாதிக்கும்?
கண்களை மூடி அமைதியின் வழியே சுயம் தன் ஆதாரத்தை முழுமையை அறியும் வரை காணும் காட்சிகள் நிஜமாகவே தோன்றும்!
சுயம் தன் ஆதாரத்தில் அமைதியில் நிலைத்து தன்னைக் கடந்த நிலையில் முழுமையுறுகிறது!
முழுமை அடைந்த பின்னர் சுய அறிவின் ஆதாரத்தில் பிறப்புமில்லை !
இறப்புமில்லை!
இருமையை கடந்த நிலையில் …
காணும் இருமை எனும் பிறப்பு இறப்பு எனும் கனவில் இருந்து முற்றிலுமாக விடுபடுகிறது!
பின்னர் அறிகிறது!
தன் பரிபூரணத்தை!
அளவிலா முழுமையை!
சுய அறிவு, தான் சுய அறிவே !
வடிவத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது என இங்கே பரவெளியில் நிகழும் நிகழ்வுகளை அமைதியாக கவனிக்கும் போது முழுமை அற்ற கனவில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது!
தனித்த அடையாளத்தில் கனவை ஆதரிக்கும் உன் சுய அறிவு தான் சுய அறிவே ( Consciousness) என அமைதியில் வார்த்தைகள் அற்ற நிலையில் அனைத்து நிகழ்வுகளையும் கவனிக்கும் போதே முழுமை அற்ற கனவில் இருந்து விழிக்க ஆரம்பிக்கிறது!
சுய அறிவு… வடிவத்திற்கு அப்பாற்பட்ட தன் எல்லை அற்ற இருப்பை அமைதியில் அறியும் போதே விழிக்க தொடங்குகிறது!
பரிபூரணம் வடிவத்திற்கு அப்பாற்பட்டது!
வடிவ அடையாளத்தில் அறிய இயலாது.
வடிவத்திற்கு அப்பாற்பட்ட எல்லை அற்ற உள் அமைதியை அறிவதன் வழியே வடிவத்திற்கு அப்பாற்பட்ட பிறவா உன்னத பரிபூரணம் அறியப்படும்!
தொடர் அமைதியில் …
காணும் வடிவ அளவு கனவில் இருந்து முற்றிலுமாக
விழித்து தன் பரிபூரணத்தை அறிகிறது!