" நீயே பரிபூரண நித்தியம் "

கே: ஜியெம் வணக்கம். மாற்றத்துக்கு உட்படும் அனைத்தும் அநித்யம் என்று நன்றாகத் தெரிகிறது. இதில் மாறாத நான் தனித்து இயங்குவது எவ்வாறு? மேலும் நான், நானாக மாறாமல் இருக்கும் நிலை எப்படி எல்லா கால, தேசங்களிலும் சாத்தியம். தயவு செய்து எனக்கு புரியும் படி சொல்லுங்கள்.

October 11, 2024 | 663 views |



ஜியெம்: இங்கு நான் என்பது எது? இக்கேள்வி எவ்வாறு கேட்கப் படுகிறது? மாறாத தனித்த நான் என்பது எது? மாற்றத்துக்கு உட்படும் அனைத்தும் அநித்யம் என்று எவ்வாறு தெரிகிறது? உன் வடிவமும், காணும் அனைத்து வடிவங்களும் எங்கே உள்ளது தற்போது? விழிப்பு

Continue Reading

கே: ஜியெம், நான் ஏன் விழிக்க வேண்டும்?விழிப்பின் அவசியம் என்ன?எதற்காக விழிக்க வேண்டும்?

October 11, 2024 | 698 views |



ஜியெம்: இக்கேள்வி தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. இங்கு நான் என்பது எது? தனித்த வடிவமா? வடிவம்தான் நீ எனில், இவ்வடிவத்தை எவ்வாறு அறிகிறாய்? உன் சுய அறிவில்தான் (Consciousness) தற்போது இந்த வடிவம் தோன்றுகிறது... உன் சுய அறிவின்றி, வடிவம் காணப்படுமா

Continue Reading

கே: ஜியெம், விழிப்பு நிலை , விழித்த நிலை விளக்கவும்.!

October 11, 2024 | 681 views |



ஜியெம்: கண்களை திறந்து பார்த்தல் - விழித்த நிலை! கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியை அறிதல் - விழிப்பின் ஆரம்ப நிலை. விழித்த நிலையில் அடையாளங்கள் மட்டுமே! விழிப்பில் அமைதி மட்டுமே! விழித்த நிலையில் காணும் கனவும் நிஜமே! விழிப்பில் பார்க்கும்

Continue Reading

நான் அனுபவிக்கும் விஷயங்கள் எப்படி நிஜமற்றதாகும்? உதாரணமாக நான் இப்போது இந்த குளிர்ந்த நீரை பருகுகிறேன். இந்த அனுபவம் எப்படி நிஜமற்றதாகும்?

January 5, 2024 | 767 views |



ஜியெம்: எந்த அடையாளத்தில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது? தன்னை வடிவமாக அடையாளம் கொண்டு, தன்னில் இருக்கும் சுய அறிவை அறியாமல் எழும் கேள்வியே இது. உன் சுய அறிவு விழிக்காததால் உனக்கு பார்ப்பதெல்லாம் நிஜமாக தோன்றும். வடிவ அடையாளத்தில் காண்பதெல்லாம் கனவே!

Continue Reading

வணக்கம் ஜியெம், ஆழ்ந்த உறக்கத்தில் என் சுய அறிவு (consciousness) ஏன் மறைகிறது?

December 2, 2023 | 694 views |



ஜியெம்: ஆழ்ந்த உறக்கத்தில் உன் இருப்பு உனக்கு தெரிவதில்லை. உனது இருப்பு சுய அறிவின் தொடக்கத்தில் தான் அறியப்படுகிறது. அணுக்களின் தொடர் வினையன்றி (elemental interaction), நான் எனும் அறிவு நிகழாது. அணுக்கள் அறியாது தன் தொடர் வினையின் ஆரம்பத்தை! சுய

Continue Reading

வணக்கம் ஜியெம், கனவு கலைந்ததும் கனவில் வரும் விஷயங்கள் அனைத்தும் அர்த்தமற்று போவது போல, இந்த விழிப்பும் ஒரு கனவே என அறிவு பூர்வமாக அறிந்தும், இந்த விழிப்பும் கலைந்து, விழிப்பில் வரும் அனைத்து விஷயங்களும் அர்த்தமற்று போவதில்லையே ஏன்? எங்கு நான் தவறவிடுகிறேன்?

November 14, 2023 | 418 views |



ஜியெம்:  விழிப்பு என்றால் என்ன? அமைதி நிலையில் தன் இருப்பை அறிவது..... அமைதி நிலையில் உன் இருப்பை நீ அறிந்தால் உன் அறிவு விழிக்க ஆரம்பித்து விட்டது. விழிப்பு என்பது கண்களை திறந்து பார்த்தல் அல்ல... கண்களை மூடி அமைதியில் தன்

Continue Reading