" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! இத்தனை பிறப்பு, உருவம், கனவு ஆகியவற்றின் நோக்கம் என்ன?

March 22, 2022 | 139 views

இவை அனைத்தும் எங்கு உள்ளது?

உனது சுய அறிவில் (Consciousness) தானே!

சுய அறிவில் தான் வடிவம், தோற்றம், உலகம் உள்ளது.

அறிவு உறக்கத்தில் மறையும் போது அனைத்தும் மறைகிறது.

தோன்றி மறைவது நிஜமல்ல, கனவே!

கனவிற்கு என்ன நோக்கம் இருக்க முடியும்?

இதை அறிந்தால், உன் சுய அறிவு விழிக்க ஆரம்பித்து விடும்.

கனவு என தெரியாததால், பிறப்பு, இறப்பு அனைத்தும் நிஜம் என நம்பப்படுகிறது.

நீ பார்ப்பது எதிலும் நிஜமில்லை…

நிஜமானது உனது உள்ளே உள்ளது.

அதை கண்களை மூடி அமைதியின் வழியே அறியலாம்….

சுய அறிவு தன்னை அறியும் வரை, விழிக்கும் வரை….. காண்பது எதிலும் நிஜம் இல்லை என அறியாது…

கனவு நிலையில் அனைத்தும் நிஜமாகிறது.

விழித்தால், அனைத்தும் நிஜமற்ற தாகிறது.

இப்பொழுது சொல்லவும்..

கனவு முக்கியமா?

கனவில் இருந்து விழித்தல் முக்கியமா?

விழிக்காமல் கனவு அறியப்படுமா?