இங்கு எதுவும் நிகழவில்லை!
எது நிகழ்வதாக தெரிகிறதோ அது நீ அல்ல!
பின் ஏன் இவ்வளவு கவலைகள்?
தன்னை அறியாததால் காட்சிகளில் பிடிப்பு……!
தன்னை அறிய தயக்கமேன்?
உறக்கத்தில் இருந்து விழிக்கும் வரை காட்சிகளில் பிடிப்பு!
தான் காண்பது கனவு என்பதை உறக்கத்தில் அறிய இயலாது!
உறக்கத்தில் என்ன நிகழ்ந்தாலும் அதில் நிஜமில்லை!
விழித்த பின் தான் கனவு என அறியப்படும்!
தற்பொழுதும் அறிவு உறங்கிய நிலையில் தான் செயல்படுகிறது தன்னை அறியும் வரை!
அறிவு விழித்த பின் தான் எனது போதனைகள் நன்றாக புரியும்!
இங்கு எதுவும் நிகழவில்லை!
இங்கு எதுவும் நிகழவில்லை என்றால் எதனால் பதட்டம்? தடுமாற்றம்?
கண்களை மூடி….அமைதியில் மூழ்கி…..
தன் ஸ்வரூபத்தை அறிந்து பூரண விழிப்படைகிறது.
அறிவு தன் மேல் திணிக்கப்பட்ட அடையாளங்களை உண்மை என ஒத்துக் கொள்கிறது உறங்கிய நிலையில்……
தான் பூரண அறிவு என அறிய ஆரம்பித்தவுடன் விழிக்கத்தொடங்குகிறது…..விழித்தவுடன் அறிகிறது…
இங்கு எதுவும் நிகழவில்லை…யென…!