" நீயே பரிபூரண நித்தியம் "

நீ எல்லையற்ற ஒன்று!

March 18, 2022 | 136 views

நீ எல்லையற்ற ஒன்று!

ஆயினும், இதை அறியாது உன்னை ஒரு சிறு வடிவமாக ஒப்புக் கொள்கிறாய்!

நீ எல்லையற்ற ஒன்று!

ஆயினும், இதை அறியாது உன்னை ஒரு சிறு வடிவமாக குறுக்கி கொள்கிறாய்!

அனைத்து வடிவங்களும் உன் சுய அறிவில் தானாக தோன்றுபவை என நீ ஒரு போதும் அறியாய்!

அனைத்து வடிவங்களும் அறிவின் வடிவங்களே!

அனைத்தும் உன் சுய அறிவில் தான் நிகழ்கிறது!

உன் சுய அறிவில் தோன்றும் அனைத்தும் உன் இருப்பின் பிரதிபலிப்பே!

உன் இருப்பில் இருந்து எதுவும் தனித்து இல்லை! உன் இருப்பில் அனைத்தும் உள்ளது.

முதலில் இதை அறியவும்!

…ஜியெம்…