" நீயே பரிபூரண நித்தியம் "

பிறப்பும் இறப்பும் கனவே

March 22, 2022 | 161 views

பிறப்பும் இறப்பும் கனவே!

இங்குள்ள யாரும் பிறக்கவுமில்லை!

பிறக்காத ஒன்றுக்கு இறப்பு யேது?

பிறப்பு, இறப்பு எனும் இருமை நிலைக்கு அப்பால்…..

இருந்துக் கொண்டே இருக்கும் நித்திய நிலையை அறிவதே தன்னை அறிதல் ஆகும்.

தன்னை அறிவதே தலையாய நோக்கமாகும்.

அறியும் வரை இருமை(duality) நிலையின் தோன்றி மறைகின்ற கனவே உண்மையாகக் கொள்ளப்படும்.

தோன்றி மறைதலே இருமை நிலை தானே ?

தோன்றாமலும் மறையாமலும் இருமைக்கு அப்பால் இருந்து கொண்டு இருக்கும் முழுமையை, பரிபூரணத்தை விளக்க முடியாத நித்தியத்தை (Awareness) அறிதல் அவசியம்!

பார்ப்பவர் பிறப்புக்கும் அப்பால்……

பிறந்தது எதுவென அறிந்தால் தன் பிறவா உன்னதம் அறியப்படும்.

பிறப்பு, இறப்பு……
தூக்கம், விழிப்பு…
தோற்றம், மறைவு…..
இவை எதுவும் நீயல்ல!

விண்ணில் காணும் அதிசய காட்சிகள் அனைத்தும் அற்புதக் கனவே!

காட்சிகளில் மயங்குவதை விட்டு, காட்சிகளின் ஆதாரத்தை அறிதல் அவசியம்!

அறிந்தால் ஆனந்தமே!

இங்கு எதுவும் பிறக்கவில்லை!

பிறக்காத ஒன்றுக்குயேது இறப்பு?

இறப்பே இல்லாத ஒன்று தன் இறப்பை பற்றி கவலைப்படுகிறது என்றால் எப்படி?

எங்கு தவறு என கண்டு பிடிக்கவும்.

இதை விட்டு விட்டு மற்றவற்றை ஆராய்ந்து என்ன பயன்?

இறப்பற்ற ஒன்று இறப்பை பற்றி வருந்துவது……

நாம் காணும் கனவைப் பற்றி வருந்துவது போல் உள்ளது.

கனவு உண்மை ஆகுமா? 

இறப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது

கனவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல……..

இதில் சற்றும் உண்மை இல்லை.

அறிவு தன் இறப்பற்ற நிலையை அறியாமல் தான் காணும் காட்சிகளில் தொடர்ந்து மயங்கி கனவை உண்மையாக கொள்வதால் இறப்பு என்ற கனவும் உண்மையாகவே தோன்றுகிறது.

அறிவு முதலில் கண்களை மூடி அசைவற்ற அமைதியில் மூழ்கினால் பிரபஞ்சம், பிறப்பு, இறப்பு போன்ற நிஜமற்ற வடிவங்களின் கனவில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

அறிவு தன் முழுமையை அறிந்த பின் பிறப்பு இறப்பு எனும் இச்சொற்கள் மதிப்பை இழக்கின்றன.

அறிவு தன் முழுமையை அறியும் வரை
பிறப்பு இறப்பு எனும் மயக்க நிலை……

அறிவே! இப்பொழுதே உன் உன்னத பிறவா நிலையை அறிந்து கொள்!

ஆனந்தத்தின் உச்சம் நீ!

இல்லாத இறப்பின் அச்சத்தில் தவிக்கலாமா?

அறிவாய்! இப்பொழுதே உன் ஆனந்தத்தை!

உண்மையின் உச்சத்தை!

பிறப்பும், இறப்பும் கனவே!

பார்ப்பவர் கனவுக்கு அப்பால்…..

இதை அறிவதே அவசியம்!