விழிப்பு, கனவு எங்கு தோன்றுகிறது?
விழிப்பு நான் என்னும் சுய அறிவில்தானே?
நான் என்பதே சுய அறிவுதான்!
காணும் தோற்றங்கள் எங்குள்ளது?
உன் சுய அறிவில் தான். நான் என்பதே சுயஅறிவுதான்!
விழிப்பிலும், கனவிலும் காண்பது தோற்றங்கள் தானே?
தோற்றங்கள் அணுக்களின் தொடர் வினையால் நிகழ்கிறது!
அணுக்கள் எங்கு உள்ளது?
உன் சுய அறிவில்தானே!
நீ காணுகின்ற அனைத்தும் ஒட்டு மொத்த படைப்பும்
சுய அறிவில்….
சுய அறிவால்….!
இதனை ஆழமாக புரிந்து கொள்ளல் அவசியம்!
மனம் எங்கே உள்ளது?
மனம் என்ற ஒன்று இல்லவே இல்லை!
எண்ணங்கள் தோன்றி மறைகிறது….
எங்கே?
உன் சுய அறிவில்!
தோற்றங்கள் அனைத்தும்
விழிப்பு நிலையாக இருப்பினும்,
கனவு நிலையாக இருப்பினும்,
ஒளியின் பிரதிபலிப்பே!
விழிப்பு நிலை, கனவு நிலை இவைகள் நிஜமற்றது!
(நிஜமற்றது = பிரதிபலிப்பு)