ஜியெம்:
விழிப்பில்…. உணர்வுகள் நிகழ்கிறது.
உணர்வுகள் நீ அல்ல!
இந்த விழிப்பு… தன்னை அறிதல், தன் முழுமையை அறிதல் அவசியமாகிறது.
தன் முழுமை அறிந்து ஆனந்தத்தில், அமிர்த நிலையில், நிலை கொண்ட குரு அமைதியாகவே இருப்பார்.
அமைதியை தேடும், தன்னை தேடும் சுய அறிவு தானாகவே, தன்னை அறிந்த குருவிடம் வந்து சேரும்.
இங்கு தனித்த அடையாளங்கள் ஏதுமில்லை எனில், யார் தேடுவது?
சுய அறிவே தன்னை அறிந்த குருவின் போதனைகளை அமைதியில் கவனித்து, விழிக்க ஆரம்பிக்கும்.
குரு, முதலில் உன்னிடம் உள்ள, இதுவரை அறியாத அமைதியை, உள் பொக்கிஷத்தை உனக்கு அறிமுகப் படுத்துவார்!
முதலில் கண்களை மூடி அமைதியை அறிய வைத்து, உன்னை வடிவ அடையாளத்தில் இருந்து விடுவித்து, சுய அறிவை உனக்கு அறிமுகப்படுத்துவார்!
பிரபஞ்சமும், உன் சுய அறிவும் வேறல்ல!
என உன்னை தனித்த அடையாளத்தில் இருந்து விடுவித்து, உன் எல்லை அற்ற, பரந்த, விரிந்த சுய அறிவை உனக்கு தெரிவிப்பார்.
இங்கு நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் ஒளியின் பிரதி பலிப்பே!
அவை நீ அல்ல என அறிய வைப்பார்!
உன் பிறவா நிலையை, உன்னதத்தை உனக்கு அறிய வைத்து உலகம் எனும் கனவில் இருந்து உனை விழிக்க வைப்பார்!
உன் எல்லை அற்ற , விளக்க முடியாத ஆனந்த அமிர்த நிலையை அறியவைக்க குருவால் மட்டுமே முடியும்!
கேள்வி: தான் உணர்ந்ததை பகிர முடியாமல் போகும் போது என்ன நிகழும்?
குரு அனைத்தையும் கடந்த நிலையில், பிறப்பும் இறப்பும் கடந்த நிலையில், தன் நித்தியத்தில் நிலைத்து இருப்பவர்!
பிறவாத, ஒன்றுக்கு இங்கு என்ன வேலை?
இருப்பினும், தற்போது குரு, சுய அறிவின் வடிவம் வாயிலாக, தான் அறிந்ததை பகிர்கிறார்.
தன் முழுமையை அறிந்த குருவை காணுதல் மிகவும் அரிது!
குருவின் வார்த்தைகள் உண்மையின் உச்சத்தில் இருந்து வருபவை….!
நித்தியத்தின் வெளிப்பாடே, முழுமையை அறிந்த குருவின் போதனைகள்!
குருவின் போதனைகள், உன்னை, உன் நிஜம் அற்ற கனவில் இருந்து விழிக்க வைத்து உன் நித்திய , பரிபூரணத்தை அறிய வைக்கும்!
குரு அனைத்தையும் கடந்த நிலையில் உள்ளவர்!
கடல் போன்று ஆழ்ந்த அமைதியில் இருப்பவர்!
கடலில் மூழ்கி முத்து எடுப்பதைப் போன்று, குருவின் அமைதியில் மூழ்கி தன்னை அறியலாம்!
கடல் அனைத்துக்கும் பொதுவானது.!
குருவும் அவ்வாறே!
நதி எவ்வாறு கடலை நோக்கி பயணித்து கடலில் சங்கமித்து கடலில் முழுமையை அடைகிறதோ,
அவ்வாறே, தன்னை வெளியே தேடும் உன் சுய அறிவானது குருவை கண்டவுடன் உள் அமைதியில் மூழ்கி, தன் ஆதாரத்தை அறிந்து, குருவும் தானும் வேறல்ல என அறிகிறது.
இருமை அற்ற நிலையில் முழுமையுறுகிறது!
இப்போது சொல்லவும்…
கடல் அப்படியே முழுமையில் உள்ளது.
குருவும் அவ்வாறே முழுமையில்!
நதி தான் கடலை நோக்கி பயணிக்கிறது!
அவ்வாறே, தன்னை, தன் முழுமையை அறிய விரும்பும் சுய அறிவு மட்டுமே குருவிடம் வந்து, கவனிக்கும்!
தன்னை தன் முழுமையை அறிய விரும்பாத, தான் சுய அறிவே என அறியாத சுய அறிவின் விளையாட்டையும், குரு ரசித்து பார்ப்பார்!
குருவுக்கு தெரியும்!
இங்கு எதுவும் நிகழவில்லையென!
எனவே, அனைத்தையும் விளையாட்டாக பார்ப்பவர் குருவே!