" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! தன் சுய இருப்பை எந்த ஆதாரத்தின் மூலமாக அறியலாம்?

April 16, 2022 | 128 views

ஜியெம்:

சுய இருப்பு என்பது என்ன ?  நான் என்பது எது?  என அறியாததால் இக்கேள்வி!

இங்கு நான் என்பதே உன் சுய இருப்பு தானே!

உறக்கத்தில் உன் இருப்பு அறியப்படுவதில்லை!

விழிப்பில் உன் இருப்பை அறிகிறாய்!

நீ இருப்பது விழிப்பில் மட்டுமே அறியப்படுகிறது.

இங்கு நான் என்பது வார்த்தைகள் அல்ல!

வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட, எல்லை அற்ற உன் இருப்பே!

கண்களை மூடி அமைதியில் நிலைத்தால், நான் எனும் இருப்பு ( ‘I am ness’ Consciousness) அறியப்படும்!

கே: சுய இருப்பை எந்த ஆதாரத்தின் மூலமாக அறியலாம் என்பதே!

உன் இருப்பை உனை அன்றி யார் அறிய இயலும்?

உன் உள்ளிருக்கும் அமைதியை உனையன்றி, யார் அறிய இயலும்?

உன் ஆனந்தத்தை உனை அன்றி யார் அறிய இயலும்?

உன் இருப்பில் தானே அனைத்தும்…. பிரபஞ்சம், கோள்கள்,அகிலம்,அனைத்து உயிரினங்களும் உள்ளது!

உன் இருப்பு அன்றி இங்கு யாதும் இல்லை!

நான் எனும் இருப்பில் இருந்தே அனைத்தும் தோன்றுகிறது… நிகழ்கிறது…மறைகிறது….தற்போது…

உன் நான் எனும் இருப்பிற்கு அப்பால் ஏதும் உள்ளதா?

அவ்வாறு இருந்தால், எவ்வாறு அறிவாய்?

நான் (‘I am ness’ Consciousness) எனும் இருப்பு இன்றி ஏதாவது அறியப்படுமா?

இங்கே அனைத்தும் நான் எனும் இருப்பில் ஆரம்பிக்கிறது…

நான் எனும் இருப்பில் அனைத்தும் மறைகிறது…

உன் இருப்பிற்கு அப்பால் ஏதும் இல்லை இங்கே என்பதை அறியாததால்…. இக்கேள்வி!

உன் நான் எனும் இருப்பில் அனைத்தும் உள்ளது எனில், உனக்கு அன்னியமானது எதுவும் இல்லை எனில், உன் நான் எனும் இருப்பிற்கு எது ஆதாரம்?

உன் இருப்பை தவிர?

உன் இருப்பே இங்கு காணும் அனைத்திற்கும் ஆதாரம் என அறியவும்!

உன் இருப்பு தன் அமைதியை உள் நிலையை அறியாமல், தன்னை தனித்த அடையாளமாகவும், தன்னில் இருந்து அனைத்தும் தனித்து இருப்பதாகவும் ஒப்புக் கொள்கிறது….

ஏன்?

தன்னை அறியாததால்!

தான் காணும் வடிவம் அல்ல!

வடிவத்தை இயக்கும் இருப்பேதான் !

தான் எல்லை அற்ற ஒன்று!

இங்கே அனைத்தும் ஒன்றே….

அனைத்தும் தானாகவே தன் இருப்பில் நிகழ்கிறது ….

காணும் எதிலும் நிஜம் இல்லை!

தன் இருப்பு மட்டுமே தற்போதைய நிஜம்!  என அறிதல் அவசியமாகிறது!

நான் வடிவம் அல்ல!

என் மேல் திணிக்கப்பட்ட அடையாளங்க ளும் நான் அல்ல!

என அறியும் வரை,

தன் இருப்பை அறிய இயலாது…..

நீ இங்கு பரவெளியில் ( space) காணும் எதுவும் நிஜம் அல்ல!

ஒளியின் பிரதிபலிப்பே எனில்…

நிஜம் அற்ற ஒன்று எப்படி உன் இருப்புக்கு ஆதாரமாக இருக்க இயலும்?

காணும் எதுவும் நிஜம் இல்லை என கண்களை மூடி , அமைதியில் நிலைத்து…. அறிந்தால்…

உன் இருப்புக்கு ஆதாரம் இங்கே பரவெளியில் ….எதுவும் இல்லை!

என் இருப்புக்கு ஆதாரம் உள்ளிருக்கும் அமைதியே…. வார்த்தைகள் அற்ற நிலையே! எல்லை அற்ற நான் எனும் இருப்பு என அறியவும்!

எல்லைக்கு தான் ஆதாரம் தேவை!

எல்லை அற்ற இருப்பிற்கு ஏது ஆதாரம்?

எல்லை அற்ற இருப்பு, தன் எல்லை அற்ற நிலையை அறியாததால்…..

தன்னை எல்லைக்கு உட்பட்ட ஒரு பொருளாக, வடிவமாக ஒப்புக் கொள்வதால் ஆதாரம் எது என கேட்கிறது?

தான் வடிவம் அல்ல! பொருளும் அல்ல!

பொருளுக்கு அப்பாற்பட்ட அருள் என அறிந்தால்…..

இங்கே அருள் எல்லை அற்ற உன் இருப்பே!

உன் நான் எனும் இருப்பில் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது!

என் இருப்பை தவிர, இங்கு எதுவும் இல்லை எனில் ஆதாரம் எதற்கு? யாருக்கு?

சற்றே ஆராயவும்!

உன் இருப்பின் ஆதாரம் வெளியே இல்லை!

உன் உள்ளே உள்ள அமைதி நிலையே…

சுய அறிவு என அறியவும் தற்போதாவது!

அறிந்தால் வெளியே நேரத்தை வீணடிக்காமல், கண்களை மூடி, உள்ளே இருக்கும் அமைதியில் நிலைத்து அறிவாய் தற்போதே!

உன் இருப்பை!

எல்லை இல்லா அமைதியை!

அளவிலா ஆனந்தத்தை!