ஜியெம்:
இங்கு சுய அறிவே ஞானம் எனப்படுவது.
இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது! எல்லை அற்றது. வடிவத்திற்கு அப்பாற்பட்டது.
தற்போது இந்த கேள்வியும் சுய அறிவே கேட்கிறது வடிவம் வாயிலாக!
உனது இருப்பு அமைதி நிலையில் உனக்கு தெரியு மல்லவா?
இதுவே சுய அறிவு.
சுயமாகவே தன் இருப்பை அறிவது வார்த்தைகள் அற்ற நிலையில்.
தன் இருப்பை அறிய வார்த்தைகள் தேவை யில்லை!
உன் சுய அறிவில் தான் அனைத்தும் நிகழ்கிறது இக்கேள்வி உட்பட!
உன் வடிவமும், காணும் அனைத்து தோற்றங்களும், நிகழ்வுகளும் உன் சுய அறிவில் தான் நிகழ்கிறது எனில், ஞானம் எப்படி நழுவும்?
காணும் அனைத்திற்கும் ஆதாரம் சுய அறிவே!
எனில் ஞானம் எப்படி நழுவும்?
இருப்பது நான் எனும் சுய அறிவே!
சுய அறிவு தன்னை அறிய எவ்வித முயற்சியும் தேவை யில்லை
தன் இருப்பு தனக்கே தெரிகையில் முயற்சி எதற்காக?
முயற்சியற்ற நிலையில் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே கேள்வி …..
இப்பொழுது சுவாசம் நடை பெறுகிறது.
நீ ஏதேனும் முயற்சிக்கிறாயா?
உணவை உட்கொண்ட பின்பு அந்த உணவே, சக்தியாகவும், இயக்கமாகவும் இருக்க நீ ஏதேனும் முயற்சிக்கிறாயா?
இதய துடிப்பு முதல் செரிமானம் வரை அனைத்து செயல்களும் தானாகவே உன் சுய அறிவால் நிகழ்கிறது, தற்போது!
நீ இங்கு எதுவும் செய்யவில்லை!
அனைத்தும் தானாகவே நிகழ்கிறது என்பதை அறியாய்!
பார்ப்பவர் நீ என அறிவதே இல்லை!
உன் பார்த்தலில் தான் அனைத்தும் சுய அறிவால் தானாகவே நிகழ்கிறது என்பதை அறிய
நீ ஒன்றும் செய்ய தேவையில்லை!
கண்களை மூடி உள்ளிருக்கும், அசைவற்ற அமைதியில் நிலை கொண்டால் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது.
எவ்வித முயற்சியும் தேவை இல்லை என அறிவாய்!
அமைதி என்பது அசைவற்றது.
முயற்சி என்பது அசைவே!
அசைவற்ற அமைதியில் நிலை கொள்ள அசையும் முயற்சி தேவை இல்லை!
உனது முயற்சியே தடையாக அமைந்துவிடும்.
முயற்சி யற்ற நிலையில் இயல்பாகவே அமைதி உள்ளது.
அமைதி என்பது நிலைத்திருப்பது….
இந்த அமைதியில் முயற்சி செய்யும் பொழுது நீ அமைதிக்கு அப்பால் செல்கிறாய்.
முயற்சி யற்ற நிலையில் நீ என்றும் அமைதியை அறிகிறாய்!
எவ்வித முயற்சியும் இல்லாமல் இருக்க, உன் சுய அறிவில் நிகழும் நிகழ்வுகளை அமைதியாக கவனிக்க வேண்டும்!
அப்போது உள்நிலை அமைதி அறியப்படும்.
அமைதியாக பார்ப்பதற்கு எவ்வித முயற்சியும் தேவையில்லை