ஜியெம் : எல்லை அற்ற அறிவு உன்னில் இருந்து தனித்து இல்லை.
உன்னுடைய நான் எனும் இருப்பில் தான் பிரபஞ்சம், மற்றும் அனைத்து வடிவங்களும் நிகழ்கிறது தற்போது!
இந்த நான் எனும் அறிவு தன்னை வடிவமாக ஒப்புக் கொள்கிறது ஆரம்ப நிலையில்…!
தன்னை அறிந்த குருவை கண்ட பின்னரே, தன் இருப்பு எல்லை அற்றது என கண் மூடி அறிகிறது.
இந்த நான் எனும் அறிவு எப்போது அறியப்படுகிறது ?
விழித்த நிலையில் தானே?
உறக்கத்தில் அதுவும் மறைகிறது அல்லவா?
தோன்றி மறைகிற நான் எனும் அறிவில் அனைத்து நிகழ்வுகளும் தோன்றி மறைகிறது.
தோன்றி மறைகிற, நான் எனும் அறிவு நிஜமாகுமா?
நான் எனும் அறிவு நிஜமில்லை எனில், உன் இருப்பில் தோன்றி மறைகிற பிரபஞ்சம், அகிலம், அனைத்து வடிவங்களும், நிகழ்வுகளும் நிஜமாகுமா?
நான் எனும் அறிவு காண்பதெல்லாம் நிஜம் என கொள்கிறது தன்னை தன் ஆதாரத்தை அறியும் வரை……
தன்னை அறிந்த ஒரு குருவை பார்த்தவுடன், கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியில் நிலைத்து தன்னைக் கடந்து, பிறவா நிலையை, பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்ட நித்தியமே தான் என அறிகிறது.
இங்கு நான் எனும் சுய அறிவில் காண்பது அனைத்தும் (பிரபஞ்சம் உட்பட) கனவே என தன் ஆதாரத்தில் நிலைத்து தன் முழுமையை அறிந்த பின்பு தான் நித்தியம் என அறிகிறது.
பிறப்பு, இறப்பு என்பது கனவே ! தானல்ல! என சுய அறிவு தெளிவடைகிறது.
பிரம்மம் என்பது தோற்றங்கள்!
சுய அறிவில் அனைத்து தோற்றங்களும் நிகழ்கிறது தற்போது!
பிரம்மம் என்பது கனவே!
பார்ப்பவர் பரப்பிரம்மம்!
பிரம்மத்திற்கு அப்பால்!
பார்க்கும் நீ நித்தியம்! பரப்பிரம்மம்!
உனக்கு எதுவும் நிகழவில்லை!
பார்ப்பது அனைத்தும் பிரம்மத்தில்!
பிரம்மத்தில் நிகழும் அனைத்தும் கனவே என பர பிரம்மம் அறியும்!
இதை அறிய முதலில் உன் சுய அறிவில் நிலைத்து அமைதியில் அனைத்தையும் கவனிக்கவும்.
வார்த்தைகள் அற்ற நிலையில் ….
உன் சுய அறிவானது, தன்னை கடந்து தன் ஆதாரத்தை அறிந்து, தான் தோன்றி மறையும் பிரம்மம் அல்ல!
இருந்து கொண்டே இருக்கும் பரப்பிரம்மம் என அறியும்!