" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! எது நிஜம்?

May 7, 2023 | 90 views

ஜியெம்:

முதலில் சொல்லவும்!

நிஜம் என எதை நீ ஒப்புக் கொள்கிறாய்?

உன் வடிவம் நிஜம் என ஒப்புக் கொள்கிறாய்!

அந்த வடிவத்தின் மேல் திணிக்கப்படும் அடையாளம் நீ என ஒப்புக் கொள்கிறாய்!

இங்கு காணும் அனைத்தும் நிஜம் என ஒப்புக் கொள்கிறாய்!

நீ பிறப்பு நிஜம் என ஒப்புக் கொள்கிறாய்!

உனக்கு இறப்பும் நிஜம் என ஒப்புக் கொள்கிறாய்!

இந்த பரவெளி நிஜம் என ஒப்புக் கொள்கிறாய்!

இங்கு நிகழும் அனைத்து நிகழ்வுகளும் நிஜம் என ஒப்புக் கொள்கிறாய்!

இங்கு நான் என்பதே வடிவம் தான் என ஒப்புக் கொள்கிறாய்!

எனது கேள்வி, இந்த வடிவம் எதனால் அறியப்படுகிறது?

உன் சுய அறிவால் (Consciousness) தானே?

உன் சுய அறிவு இன்றி இங்கே எது உள்ளது?

நீ காணுகின்ற அனைத்தும்…பிரபஞ்சம், கோள்கள், அகிலம் மற்றும் அனைத்து வடிவங்களும், உன் வடிவம் உட்பட மாறிக் கொண்டே இருக்கிறது அதிவேகத்தில் தற்போது!

நிஜம் என்பது மாறாதது!

நிலையானது எனில் நீ காணும் அனைத்தும் மாறி கொண்டே இருப்பின் இங்கே எதை நிஜம் என நீ ஒப்புக் கொள்கிறாய்?

அனைத்தும் எங்கே தோன்றுகிறது?

நான் எனும் சுய அறிவில்தானே?

அனைத்தும் எங்கே மறைகிறது?

நான் எனும் சுய அறிவில்தானே?

எங்கே நிகழ்கிறது?

நான் எனும் சுய அறிவில் (I am ness’ Consciousness) தானே?

நான் எனும் சுய அறிவு (Consciousness) காலை சுமார் 5 மணியளவில் தோன்றி…..இரவு சுமார் 10 மணி வரை இருக்கிறது.

சுய அறிவு, உன் இருப்பு உன்னால் அறியப்படுகிறது!

இந்த இருப்பு மாறுவதில்லை!

இதில் காணும் நிகழ்வுகள் மட்டுமே மாறுகிறது !

எனவே தற்போதைய நிஜம் இந்த ‘நான்’ எனும் சுய அறிவே!

ஏனெனில் , இது மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்கிறது.

எனது கேள்வி: நான் எனும் சுய அறிவும் (‘I am ness’ Consciousness) காலை தோன்றி, இரவு மறைகிறது…. ஆயின்…தோன்றி மறையும் …‘நான் ‘ எனும் இந்த சுய அறிவு நிஜமாகுமா?

நான் எனும் சுய அறிவே, நிஜம் இல்லை எனில்,

இந்த சுய அறிவில் நிகழும் நிகழ்வுகள், தோற்றங்கள் நிஜமாகுமா?

அப்படியெனில், இங்கே பரவெளியில் காணும். … நிகழும்….இவைகளில் எது நிஜம்?

எதுவும் நிஜம் இல்லையெனில், இங்கே எனக்கு என்ன வேலை இருக்கிறது?

எதுவும் நிஜம் இல்லை எனில்…இவை யாவும் என்ன?

சற்றே ஆராயவும்!

இதற்கு விடை வெளியே இல்லை!

உன்னிடமே உள்ளது!

கண்களை மூடி அமைதியில் நிலைத்து உள் இருக்கும் ஒளியை பார்த்த பின்பே ஒளியே… சுயம்…. ஒளியில் இருந்தே அனைத்தும் பிறக்கிறது.

காண்பது அனைத்தும் ஒளியின் பிரதி பலிப்பே!

பிரதி பலிப்பு எவ்வாறு நிஜமாகும்?

எனில்… நான் காண்பது முற்றிலும் கனவே! நிஜம் இல்லை! என அறியப்படும்!

எனில் நான் என்பது எது என அறிய, சுய அறிவு அமைதியில், நிலைத்து …தன்னை கடந்த நிலையில் தன் ஆதாரத்தை அறிந்தவுடன் விழிப்படைகிறது!

விழிப்படைவில் அறிகிறது !….

தான் நித்தியம்!

தனக்கு பிறப்புமில்லை

இறப்புமில்லை என..!

தன் உன்னத இருமை அற்ற நிலையை அறிகிறது.

பிறப்பு, இறப்பு எனும் நிஜம் அற்ற, தோன்றி மறைகிற எதுவும் தான் அல்ல!

தான் பார்க்கும் நித்தியம்!

இருமை அற்ற நிலை!

பர வெளியில்..(Space)
இருமை நிலையில்..(Duality)
பார்க்கும் அனைத்தும்..
கனவே என அறிகிறது!

நித்தியத்தில் தன் முழுமையை அறிந்து
இருமை எனும் கனவு நிலையில் இருந்து விடுபட்டு ….
தன் முழுமையை, பரிபூரணத்தை அறிகிறது….!

இப்பொழுது அறிகிறாயா?

இங்கு காணும் இருமை (Duality) நிலையில் எதுவும் நிஜம் இல்லையென!

பார்க்கும் நீ மட்டுமே நிஜம்!

மாற்றமில்லா…..உன் அற்புதத்தை அறியும் வரை காணும் கனவே நிஜமாக இருக்கும்!

சுய அறிவு விழிப்படைந்த, பின்னரே எதுவும் நிஜம் இல்லை இங்கே என அறிகிறது!

விழிப்படையும் வரை….நிஜம் அற்ற கனவே நிஜமாக ஒப்புக் கொள்ளப் படுகிறது.

தற்போதாவது அறியவும் தன் சுய அறிவு தன் ஆதாரத்தை நித்தியத்தை அறிதல் அவசியம் என….!

தன் ஆதாரத்தை, பிறப்புக்கு அப்பாற்பட்ட எல்லை அற்ற நிஜத்தை அறிதல் அவசியம் என!