" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! இந்த உள்ளார்ந்த பயணத்தில் புரட்சி என்று எதை கூறுவீர்கள்?

April 23, 2022 | 152 views

ஜியெம்: புரட்சி என்று எதை கூறுகிறாய்?

புரட்சி என்பது இருப்பதை ஒப்புக் கொள்ளாமல் ஒரு மாற்றத்தை கொண்டு வருவது அல்லவா?

இங்கு கேள்வி: உள்ளார்ந்த பயணத்தில் புரட்சி என்று எதை சொல்வது?

உன் உண்மை நிலை விளக்க முடியாதது!

வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது!

பொருட்களுக்கு அப்பாற்பட்டது!

பரவெளிக்கு அப்பாற்பட்டது!

நீ பிறப்பும் இறப்பும் அற்ற உன்னத நித்தியம் தற்போது!

இதை அறிவதே இல்லை!

நீ முழுமையான ஒன்று!

இருமை நிலைக்கு அப்பாற்பட்ட ஒன்று!

எனில் நீ ஏன் பிறப்பு இறப்பு எனும் இருமை நிலையில் தடுமாறு கிறாய்?

இது ஆராயப்பட வேண்டிய ஒன்று!

உன் அற்புதம் அறியாத உனக்கு இங்கு நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் நிஜமாகவே தோன்றும்!

நான் என்பது எது என அறியும் வரை!

இங்கு உள் பயணம் எதற்கு?

தன்னை அறியாததால்!

தன் இருப்பை அறியாதாதால் !

தன் முழுமையை அறியாததால் !

முழுமையான உனக்கு பயணம் எதற்கு?

முழுமை யில் புரட்சி ( மாற்றம் ) எதற்கு?

புரட்சி என்பதே தன் முழுமையை அறியாததால் தானே?

ஆயினும் புரட்சி என்பது வெளி பயணத்தில் மட்டுமே!

மாற்றங்கள் வெளியே!

உள் நிலையில் மாற்றங்கள் ஏது?

மாற்றங்கள் அனைத்தும் வெளியே!

மாறாதது என்றும் தற்போது உள்ளே!

மாறாத ஒன்று எப்போதும் உள்ளே உள்ளது என்பதை அறியவே கண்களை மூடி உள்ளே உள்ள அற்புதத்தை அறிகிறாய்!

வெளியே என்ன மாற்றங்கள் தேவை?

என்ன மாற்றங்கள் வந்தாலும் அவையும் மாறுகின்ற மாற்றங்கள் தானே?

மாறுகின்ற மாற்றங்களில் எந்த நிஜமும் இல்லை எனில் மாற்றத்திற்கு முயலுவதை விட்டு மாறாத நிஜம் உன்னுள் உள்ளது தற்போது என அதை அறிதல் அவசியமாகிறது!

முதலில் நீ அறிய வேண்டியது

இந்த வடிவம் உபயோகத்திற்கே!

இந்த வடிவம் உன் சுய அறிவில் ( ‘I am ness’ Consciousness) தற்போது நிகழ்கிறது….

சுய அறிவில் அனைத்தும் தோன்றி , நிகழ்ந்து , மறைகிறது என அறிவதே!

உன் சுய அறிவு இந்த வடிவத்தை பயன் படுத்துகிறது தற்போது!

உன் சுய அறிவில் மட்டுமே இந்த வடிவமும், காணும் அனைத்து வடிவங்களும் தற்போது நிகழ்கிறது என அறிதல் மிகவும் அவசியமாகிறது!

ஆயினும் இதை அறியாது பரந்த விரிந்த எல்லையற்ற உன் சுய அறிவு தற்போது தன்னை ஒரு சிறு வடிவமாக ஒப்புக் கொள்கிறது!

வடிவ அடையாளத்தில் தற்போது தடுமாறுகிறது!

பிறப்பு , இறப்பு…நிஜம் என ஒப்புக் கொள்கிறது!

உன் சுய அறிவே ( Consciousness) தற்போது தன்னில் தோன்றிய வடிவத்தை தனதாக ஒப்புக் கொள்கிறது …..!
தன்னை முழுமையாக அறியாததால்!

தன் முழுமையை அறிந்த குருவை கண்ட பின்னர்,

‘தான் இந்த வடிவம் அல்ல! பிறப்பும் இறப்பும் நிஜம் அல்ல ! இங்கு காண்பது அனைத்தும் முற்றிலும் கனவே ‘ எனும் போதனையை ஏற்று கண்களை மூடி உள் நோக்கி கவனித்து தன் முழுமையை அறிகிறது!

இந்த வடிவம் நிஜம் அல்ல உபயோகத்திற்கு மட்டுமே எனும் போது வடிவ அடையாளங்களும் உபயோகத்திற்கு மட்டுமே அவற்றில் எதுவும் நிஜம் அல்ல என ஒப்புக் கொண்டால் மட்டுமே உள் நோக்கிய பயணத்தில் தங்கு தடையின்றி தன்னை …தன் முழுமையை…………..அறியலாம்!

வெளியே வடிவம் தான் என்று வடிவ அடையாளத்தில் மயங்கும் போது வெளியே தங்கி விடுவதால் உள்நோக்கிய பயணம் தடை படுகிறது.

இங்கு உள்ளார்ந்த புரட்சி என்பதே அடையாளங்களை விடுத்து, அமைதியில் நிலைத்து, காணும் கனவில் இருந்து விடுபட்டு, தன் பிறவா அற்புதத்தை அறிவதே!

எனவே புரட்சி என்பது தற்போது தான் இந்த வடிவம் அல்ல! 

வடிவம் சார்ந்த அடையாளங்களும் அல்ல! என அறிவதே!

சுய அறிவில் நிலைத்து இங்கு எதுவும் நிகழவில்லை ! நிகழும் அனைத்தும் தன்னில்….தன் சுய அறிவில் தானாகவே நிகழ்கிறது என அறிந்தால்…உனது வேலை அனைத்து மாற்றங்களையும் அமைதியாக கவனித்தலே!

கண்களை திறந்த நிலையில் அனைத்து மாற்றங்களையும் அமைதியாக கவனிக்கும் போது உன் சுய அறிவு அப்போதே அனைத்தில் இருந்தும் விடுபடுகிற்து!

பிறகு கண்களை மூடி வெகு எளிதாக உள் இருக்கும் தன் மாற்றமில்லா அற்புதத்தை அறிய ஆரம்பிக்கிறது!

அமைதியில் …தொடர் கவனித்தலில்…தன் முழுமையை …இருமை நிலையற்ற அற்புதத்தை அறிகிறது!

பின்னர் அறிகிறது அனைத்து புரட்சியும் கனவே!

தனக்கு ஒன்றுமே நிகழவில்லை என!

விழித்த பின்னர் கனவு ஏது?

இங்கு உள்ளார்ந்த புரட்சி என்பதே அமைதியில் நிலைத்து தன் பிறவா அற்புதத்தை தற்போது அறிவதே!