ஜியெம்:
சுயம் உள்ளே உள்ளது!
சுயத்தின் அறிவில் ‘ நான் எனும் இருப்பில் பரவெளியில், அனைத்து நிகழ்வுகளும் தானாகவே நிகழ்கிறது தற்போது!
உடல் எனும் வடிவம் எங்கு நிகழ்கிறது?
நான் எனும் சுய அறிவில் தானே?
காணும் வடிவங்கள் அனைத்தும் உன் சுய அறிவில் தானாகவே நிகழ்கிறது தற்போது!
நான் எனும் சுய அறிவில் வடிவம் உள்ளது.
சுய அறிவு மறைந்தவுடன் வடிவம் இல்லை !
இங்கு அகப் பயணம் என்பதே வடிவத்திற்கு முன்பாகவே உள்ள சுயத்தை அறிவதே.
நான் என்பது சுய அறிவே!
வடிவம் அல்ல!
வடிவத்திற்கு அப்பாற்பட்ட எல்லை அற்ற உன் இருப்பே!
இதை அறியவே கண்களை மூடி, அமைதியில் நிலைப்பது.
கண்களை மூடவும்!
ஏதேனும் காட்சிகள் இருக்கிறதா?
அமைதி
அறியப்படுகிறது.
இந்த அமைதியே கண்களை விரிக்கும் போது, அனைத்து தோற்றங்களாக காட்சி அளிக்கிறது தற்போது உனது வடிவம் உட்பட!
இங்கு உள்நோக்கிய அகப்பயணத்தில் கண்களை மூடுவதே, வெளியே காணும் காட்சிகள் நிஜம் அல்ல! என அறியவே!
கண்களை மூடினாலே, தோற்றங்களை கடந்த அமைதி அறியப்படுகிறது!
எனில், எதற்காக வடிவத்தை துன்புறுத்த வேண்டும்?
இக்கேள்வி, தான் தனித்த வடிவம் என்கிற அடையாளத்தில் கேட்கப்படுகிறது.
தனித்த அடையாளத்தில்,(personality) தன்னை பற்றிய உண்மையை அறிய இயலாது.
இங்கு எது தனித்து உள்ளது?
அனைத்தும் நான் எனும் சுய அறிவில் தானே உள்ளது?
எனில், தனித்த அடையாளத்தில் எவ்வாறு நிஜத்தை அறிய இயலும்?
நான் என்பது வடிவம் என,
சுய அறிவு தன்னை மாறாக அடையாளம் கொள்கிறது.
தன் எல்லை அற்ற இருப்பை அறியாததால், தன்னை ஒரு சிறு வடிவமாக ஒப்புக் கொள்கிறது.
நான் என்பது வடிவம் அல்ல!
என தன் முழுமையை அறிந்த குருவால் மட்டுமே போதிக்க முடியும்!
குருவின் போதனையை ஆழ்ந்து கவனித்தாலே போதும்!
தான் வடிவம் அல்ல என எளிதாக சுய அறிவு அறிந்துவிடும்.
தான் வடிவம் அல்ல என கண்களை மூடி அறிய, வடிவத்தை எவ்வாறு துன்புறுத்த இயலும்?
இச்செயல்கள் முற்றிலும் தான் சுய அறிவு (Consciousness) என அறியாததாலே!
வடிவ அளவில் தடுமாற்றமே!
சுய அறிவில் அமைதியும், ஆனந்தமுமே!
இப்போதாவது நான் என்பது சுய அறிவே ( I am ness’ Consciousness) என கண்களை மூடி அறிந்தால், அனைத்தும் தன்னில் அடங்கி உள்ளது என அறிந்தால், அந்த சுய அறிவே, அமைதியில் நிலைத்து, அமைதியின் ஆதாரத்தை அறியலாம்.
இப்போதாவது அறியவும்!
அகப் பயணத்திற்கு எவ்வித முயற்சியும் தேவை இல்லை!
கண்களை மூடினால் போதுமானது என!