" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், அனைத்தில் இருந்தும் (வடிவம், எண்ணங்கள், உலகம்….. ) என்னை நீங்கள் விடுவிக்க முடியுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

June 8, 2023 | 75 views

ஜியெம்:
நீ காணும் அனைத்தும் எங்கு உள்ளது?

நான் எனும் சுய அறிவில் ( Consciousness) தானே?

சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என முதலில் அறியவும்!

முதலில் சுய அறிவு என்பது தன்னை பற்றிய தன் இருப்பை பற்றிய அறிவு என அறியவும்.

கண்களை மூடி அமைதியில் நிலைத்து தன் இருப்பை சுயமாக அறிவதே, சுய அறிவு.

நான் இருக்கிறேன்’ என்று அமைதியில் அறிவது.

இந்த அறிவு சுயமாகவே அறியப்படுகிறது.

இந்த அறிவு எதையும் சார்ந்து இல்லை!

ஏனைய பொருள் சார்ந்த அறிவு அனைத்தும் இந்த சுய அறிவினால் அறியப்படுகிறது.

கேள்வி: அனைத்தில் இருந்தும் என்னை விடுவிக்க முடியுமா? என்பதே…

நீ காணும் அனைத்தும் சுய அறிவில் தற்போது தானாகவே நிகழ்கிறது.

ஆழ்ந்த உறக்கத்தில் உன் இருப்பு அறியப்படுவதில்லை.

முதலில் உன் இருப்பு விழிப்பு நிலையில் அறியப்படுகிறது.

காணும் அனைத்தும் அதே சமயத்தில் தோற்றமளிக்கிறது.

எங்கு?

நான் எனும் இருப்பின் வழியே!

அனைத்தும் சுய அறிவு மறையும் போது உறக்க நிலையில் மறைகிறது.

முதலில் அறிய வேண்டியது…

சுய அறிவு எங்கு தோன்றுகிறது?

எங்கு மறைகிறது?

தோன்றுவதும், மறைவதும் நிஜமாகுமா?

நிஜம் இல்லை எனில் சுய அறிவில் (Consciousness) தோன்றும் நிகழ்வுகளும் நிஜம் அற்றதே!

நிகழ்வுகள் நிஜம் இல்லை எனில், எவ்வாறு பாதிப்பு நிகழும்?

நிஜம் எது என அறியாததால்,

 நிஜமற்ற நிகழ்வுகளால் பாதிப்பே!

கேள்வி: நான் என்ன செய்ய வேண்டும் என்பதே?

நான் எனும் சுய அறிவு (Consciousness) முதலில் தான் தனித்த வடிவம் அல்ல!

எல்லை அற்ற இருப்பே என அறிதல் அவசியம்.

சுய அறிவில் அமைதியில் வார்த்தைகள் அற்ற நிலையில், எண்ணங்கள் நிகழாது.

நிகழும் எண்ணங்களும் நான் அல்ல!

காணும் வடிவமும் நான் அல்ல!

பர வெளியில் தானாகவே தற்போது நிகழும்…புவி, கோள்கள், பிரபஞ்சம், வடிவங்களும்,அனைத்து நிகழ்வுகளும் நான் அல்ல!

அனைத்தும் என்னுள் இருக்கும் ஒளியின் பிரதிபலிப்பே என அறிதலும்….

காணும் காட்சிகள் கனவே அன்றி நிஜம் இல்லை என அறிதலும்  அவசியமாகிறது.

சுயம் தன் இருப்பை முதலில் அறிதல் அவசியம்!

தன் இருப்பை ( Consciousness) அறிந்தவுடன் சுய அறிவு விழிக்கிறது.

பின்னர், தன்னை கடந்து தன் ஆதாரத்தை ( Source, The Absolute) அறிகிறது.

தன் பிறவா நிலையை அறிந்தவுடன் பார்த்த அனைத்தும் கனவே என விழிக்கிறது.

இங்கு பரவெளியில் தானாகவே நிகழும் அனைத்தும் கனவே என அறிந்தால், பாதிப்பு ஏது?

பார்க்கும் நீ , தற்போதும் நித்தியம்!

உனக்கு ஒன்றும் நிகழவே இல்லை!

நிகழும் அனைத்தும் கனவே எனில்,

நீ அற்புத , உன்னதத்தில், ஆனந்தத்தில் நிலைத்து இருக்கிறாய் என அறிய நான் எனும் சுய அறிவு தன் முழுமையை அறிதல் அவசியம்.

சுய அறிவு  தேவையற்ற அடையாளங் களால் , பாதிப்படைகிறது.

எந்த அடையாளமும் நான் அல்ல!

நான் என்பதே சுயமாக தோன்றிய சுய அறிவே என அறிகிறது முதலில்!

பின்னர் தன் சுய அறிவில் நிலைத்து தன் ஆதாரத்தை அறிந்து , முழுமை யுருகிறது.

முழுமையை அறிந்தால் தொடர் ஆனந்தமே!

நீ செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை இங்கே!

கண்களை மூடி அமைதியில் நிலைத்தால், அனைத்தில் இருந்தும் தற்போதே விடுபடுகிறாய்!

அறியவும் இதை தற்போதாவது!

💐💐💐