" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! “எது மாற்றத்திற்கு உட்படுகிறதோ அது உண்மை பொருள் அல்ல” என்றால் இங்கு எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டதாக தானே உள்ளது. அப்போது எது மாற்றம் இல்லாதது? எது உண்மையானது.?

May 14, 2022 | 97 views

ஜியெம் :
நல்ல கேள்வி!

உன் சுய அறிவில் (Consciousness) காணும் அனைத்து தோற்றங்களும் விளக்க முடியாத வேகத்தில் தோன்றி மறைகிறது தற்போது.

பார்ப்பதற்கு நிலையான தோற்றம் போல காட்சி அளிக்கிறது.

நீ காணும் அனைத்தும் எங்கு தோன்றுகிறது?

உன் சுய அறிவில் தானே?

நான் இருக்கிறேன் எனும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உன் இருப்பில் அனைத்தும் தோன்றி மறைகிறது.

உன் இருப்பு அப்படியே உள்ளது.

உன் இருப்பில் தான் தோற்றமும் மறைவும் தொடர்ந்து நிகழ்கிறது.

உன் நான் எனும் இருப்பு மாறவேயில்லை!

உன் இருப்பில் காணும் காட்சிகள் தான் மாறிக்கொண்டே இருக்கிறது!

மாறுகின்ற காட்சிகள் உண்மை ஆகாது.

உன் வடிவம் உட்பட அனைத்து வடிவங்களும் மாற்றங்களுக்கு உட்பட்டது.

இப்போது, மாற்றமற்ற, நான் எனும் அறிவு காலையில் விழிப்பில் அறியப்படுகிறது…உறக்கத்தில்….அதுவும் மறைகிறது.

இந்த நான் எனும் அறிவு எங்கு தோன்றி எங்கு மறைகிறது என அறிதல் அவசியமாகிறது.

இந்த நான் எனும் சுய அறிவு….தன் ஆதாரத்தை அறிதல் அவசியம்!

அனைத்திற்கும் ஆதாரமான நித்தியம் (Awareness) மாற்றமில்லாமல்….அப்படியே இருக்கிறது.

அது நீயே!

என அறியவும் ….

தன் சுய அறிவின் (Consciousness) வழியே!

அறிந்தால் மாறுகின்ற கனவு நிலையில் தடுமாற்றம் உனக்கில்லை!

பார்ப்பவர் – மாற்றமில்லாதது- நீயே!

பார்ப்பது- மாற்றங்களுக்கு உட்பட்டது- நீயல்ல!

என நன்கு தெளிவாக அறியப்படும்!