பிறவா நிலை!
நித்தியம் (Absolute, Awareness) மட்டுமே இருக்கிறது.
நித்தியத்தில் சுய அறிவு (Consciousness) தோன்றி மறைகிறது.
சுய அறிவானது நித்தியத்தை சார்ந்துள்ளது.
சுய அறிவு அனைத்து வடிவங்களையும் படைத்து,
தன் இருப்பை வடிவங்களின் வழியாக தானே அறிகிறது.
சுய அறிவானது வடிவங்களுக்கு முன்பே இருப்பினும்,
தன் இருப்பை வடிவத்தின் வழியாக அறிவதால்,
‘தான்’ இந்த வடிவமே என தெரியாமல் அடையாளம் கொள்கிறது.
இந்த வடிவமே தான், ‘தான்’ என அடையாளம் கொள்வதால், தான் பிறந்தது நிஜம் எனவும், இறப்பது நிஜம் எனவும் தெரியாமல் ஒப்புக் கொள்கிறது.
தன்னை அறிந்த ஒன்றை கண்டவுடன், அது தான் இந்த வடிவமல்ல (not the form) சுய அறிவே என அறிகிறது.
பின்னர், அது சுய அறிவிலேயே நிலை கொண்டு தன் உன்னத பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற்பட்ட நித்தியத்தை அறிகிறது.
சலனமற்ற அமைதியில் நிலைத்து (stillness) தன் ஆதாரத்தை (Absolute,Awareness) அறிகிறது.
சலன மற்ற அமைதியில் நிலைத்து இருப்பது மிகவும் அவசியமாகிறது.
சுய அறிவு தன் ஆதாரத்தை அறியும் வரை முழுமையுருவ தில்லை!
தன் ஆதாரத்தை அறிந்ததும் முழுமை யடைகிறது.
தன் நித்தியத்தை அறிந்ததும் தன் பிறவா நிலையை அறிந்து,
தான் பார்த்த எதிலும் நிஜம் இல்லை
முற்றிலும் கனவே என அறிகிறது!