" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! பிரபஞ்சம், உலகம், காணும் வடிவங்கள் அனைத்தும் நிஜமாக தோன்றுகிறதே, இவையெல்லாம் எப்படி கனவாகும்,எனது வடிவம் உட்பட?

May 21, 2022 | 181 views

ஜியெம் : உலகம் எங்கே உளது? 

உன் சுய அறிவில் (Consciousness) தானே!

உன் சுய அறிவில் தான் பிரபஞ்சம், கோள்கள், அனைத்து வடிவங்களும் நிகழ்கிறது என முதலில் அறியவும்.

தனித்த அடையாளத்தில் (Personality) தடுமாற்றமே!

உன் சுய அறிவில் தான் இங்கு அனைத்தும் நிகழ்கிறது என அறியவும்!

உன் சுய அறிவின்றி(Consciousness), எது உளது?

இதை முதலில் ஆராயவும்!

உண்மை வடிவத்திற்கு அப்பாற்பட்டது!

எனில், இங்கே எது நிஜம்?

நான் தோற்றங்கள் அல்ல!

தோற்றங்களின் அடையாளமும் அல்ல!

நான் பெயர் அல்ல!

எந்த குணாதிசயங்களும் நானல்ல!

நான் பிறவா நித்தியம்!

இங்கு நான் மட்டுமே இருக்கிறேன்!

என்னில் அனைத்தும் தோன்றி மறைகிறது!

தோன்றி மறைகிற எதுவும் நானல்ல! 

என நீ அறியும் வரை ….

இங்கு நிகழும் அனைத்தும் கனவே, நிஜம் அல்ல! 

என அறியும் வரை….

உன் ஆதாரத்தை அறியும் வரை,

இங்கு காணும் காட்சிகள் நிஜமாகவே இருக்கும்!

இங்கு தனித்த அடையாளம் எதுமில்லை!

அனைத்தும் தானாகவே தோன்றுகிறது! தற்போது!

தானாகவே நிகழ்கிறது! தற்போது!

தானாகவே மறைகிறது! தற்போது!

நான் பார்க்கும் நித்தியம்!

பார்க்கும் எனக்கு ஆரம்பமும் இல்லை!

முடிவும் இல்லை!

நான் இருந்து கொண்டே இருக்கும் நித்தியம்! 

என அறியும் வரை…

பிரபஞ்சம் எனும் கனவும், இங்கு காணும் அனைத்தும் நிஜமாகவே தோன்றும்!

தோன்றி மறைவது நிஜமாகுமா?

பார்ப்பவர் தோற்றத்திற்கு அப்பால்…

என கண்களை மூடி, அமைதியில் நிலைத்து , தன்னை, தன் பிறவா நிலையை , முழுமையை

அறியும் வரை…

தன் சுய அறிவில் , அமைதியில், வார்த்தை களுக்கு அப்பாற்பட்ட நிலையில் நிலைத்து தன் உன்னதத்தை

அறியும் வரை….

கனவே நிஜமாக கொள்ளப்படும்!

விழித்தால் தெரியும், 

எது நிஜமென!