நீ இங்கு எதுவும் செய்யவில்லை!
அனைத்தும் சுய அறிவில் ( Consciousness)தானாக நிகழ்கிறது!
நீ பார்க்கவே செய்கிறாய்!
ஆம். நீ இங்கு எதுவும் செய்யவில்லை!
மூச்சு விடுதல், இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், வளர்சிதை மாற்றங்கள்….போன்ற வடிவத்தினுள் நிகழும் அனைத்து செயல்களும் சுய அறிவில் தானாக நிகழ்கின்றது.
நீ யேதும் முயற்சி செய்கிறாயா?
சூரிய உதயம், அஸ்தமனம், மழை, மற்றும் ஒட்டு மொத்த தோற்றங்களும் அதன் செயல்பாடுகளும் தானாகவே
சுய அறிவில் நிகழ்கிறது!
நீ யேதும் முயற்சி செய்கிறாயா?
உன் இருப்பே (I am ness) நான் எனும் சுய அறிவில் தான் அறியப்படுகிறது.
சுய அறிவு தானாகவே தோன்றுகிறது உன் இருப்பில்!
விழித்த நிலை முழுவதும், சுய அறிவே அனைத்து வடிவங்களிலும் செயல் ஆற்றி அனைத்தும் நிஜம் என நம்பப்படுகிறது!
உறக்கம் வந்ததும் சுய அறிவு மறைகிறது!
நீ யேதும் முயற்சி செய்கிறாயா?
சுய அறிவே அனைத்து வடிவங்களிலும் செயல் படுகிறது!
வடிவத்தின் இயக்கம் சுய அறிவினாலே!
அறிவின்றி வடிவமேது?
அனைத்தும் சுய அறிவென்றால், அனைத்தையும் பார்ப்பது எது?
நீயே அது! (YOU ARE THAT)
இப்பொழுது ஒப்புக் கொள்கிறாயா, அனைத்தும் சுய அறிவில், அறிவால்…!
நீ பார்க்க மட்டுமே செய்கிறாய் என்று!
இங்கு நான் போதிப்பது…சுய அறிவுக்கே! (Consciousness), பொருள் சார்ந்த அறிவுக்கு அல்ல!
(Consciousness = சுய அறிவு, அறிவு, சுய இருப்பு, இருப்பு)