ஜியெம்:
இக்கேள்வி எந்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது?
இங்கு நான் என்பது உன் வடிவம் தான் என்கிற அடையாளத்தில் தான்……. இல்லையா?
உனது வடிவம் எவ்வாறு அறியப்படுகிறது?
உன் சுய அறிவில் தானே?
உன் வடிவம் மட்டுமன்றி, அனைத்து வடிவங்களும், காட்சிகளும், நிகழ்வுகளும் எங்கு நிகழ்கிறது?
உன் சுய அறிவில் தான்!
முதலில் அனைத்திற்கும் காரணமான சுய அறிவை அறியவும்!
சுய அறிவு என்பது எது?
கண்களை மூடவும்.
அமைதி தெரிகிறது.
இப்போது உன் இருப்பு உனக்கு தெரிகிறது அல்லவா?
இந்த நான் எனும் இருப்பு அமைதியில் அறிவதே சுய அறிவு!
அமைதியில் வடிவங்கள் இல்லை!
உன் இருப்பு வடிவங்களுக்கு அப்பாற்பட்ட எல்லை அற்றது.
இதை நீ அறியாய்!
நீ காணும் வடிவம் தான் என்று அடையாளம் கொள்வதால், எல்லை அற்ற உனது இருப்பு அறியப்படுவதில்லை!
உன் எல்லை அற்ற இருப்பில் தான் இந்த பிரபஞ்சமும், அகிலம், அனைத்து உயிரினங்களும், அனைத்து தோற்றங்களும் நிகழ்கிறது தற்போது என்பதை நீ அறியாய்!
தெரியாமல் உன் மேல் திணிக்கப்பட்ட வடிவ அடையாளங்கள் நிஜம் என ஒப்புக் கொள்வதால், உன் சுய அறிவை பற்றி நீ அறிய வாய்ப்பில்லை.
முதலில் அறியவும்!
உன் நான் எனும் அறிவில் தான், அனைத்தும் நிகழ்கிறது தற்போது!
உன் நான் எனும் அறிவில் காண்பதெல்லாம் இன்றி, இங்கு எதுவும் இல்லை!
‘சில விஷயங்களை மறக்க நினைக்கிறேன். என்னை சுற்றி உள்ளவர்களால், மீண்டும் அந்த நினைவுகளால் பாதிக்கப் படுகிறேன்.
இதை கடந்து செல்வது எப்படி!’…. இதுவே கேள்வி…..இல்லையா?
நினைவு என்றால் என்ன?
இது எண்ணம் தானே?
எண்ணங்கள் எங்கு உள்ளது?
நான் எனும் சுய அறிவில் தானே?
சுய அறிவு இல்லை எனில் எண்ணங்கள் இருக்குமா?
எண்ணங்களுக்கு இருப்பு இல்லை!
அது நீ அல்ல!
முதலில் இதை அறியவும்!
உன் சுய இருப்பு தற்போது உள்ளது!
இந்த சுய அறிவில் எண்ணங்கள் தோன்றி மறைகிறது.
நீ அமைதியில், சுய அறிவில் வார்த்தைகளுக்கு முந்தைய நிலையில் நிலைத்து, அமைதியாக கவனித்தால் எண்ணங்கள் பாதிக்காது.
நீ அல்லாத ஒன்று, எப்படி உனை பாதிக்கும்?
நீ சுய அறிவு தானே தற்போது?
உனை எவ்வாறு, இருப்பற்ற எண்ணங்கள் பாதிக்கும்?
உன்னில் நிகழும் நிகழ்வுகள் நீ அல்ல!
நீ நிகழ்வுகளுக்கு முன்பே இருக்கிறாய்!
உன்னில் தோன்றி மறையும் எண்ணங்களும் நீ யல்ல!
எண்ணங்களுக்கு முன்பே நீ இருக்கிறாய்!
எனில் எது உனை பாதிக்கும்?
பாதிப்பு அனைத்தும் உன் அடையாளத்திற்கே!
உனக்கல்ல!
எல்லை அற்ற உன் இருப்பை அமைதியில் அறிந்தால், தோன்றி மறைகிறது எதுவும் உனை பாதிக்காது.
உன் இருப்பை அறியாமல், இல்லாத அடையாளத்தை நிஜம் என கொள்வதால் பாதிப்பே!
கேள்வி : இதை கடந்து செல்வது எப்படி?
எதை கடக்க உள்ளாய்?
இங்கு அனைத்தும் உன் நான் எனும் எல்லை அற்ற இருப்பில் தோன்றி மறைகிறது அதி வேகத்தில்.
தோன்றி மறைவது நிஜமாகுமா?
நிஜம் இல்லையெனில், எது உனை பாதிக்கும்?
நிஜம் அற்ற வடிவ நிகழ்வுகளை, நிஜம் என கொள்ளும் வரை, தன் இருப்பை அமைதியில் அறியும் வரை பாதிப்பே!
தற்போதே தன்னில் இருக்கும் அமைதியை அறிந்து அதன் ஆற்றலில் நிலை கொண்டால்……
இங்கே உனை யன்றி எதுவுமில்லை!
காணும் அனைத்தும் நிஜம் அற்றதே என அறியவும்
அமைதியில்!
அமைதியில், எண்ணங்களும் இல்லை,
பாதிப்பும் இல்லை.
தன் இருப்பு மட்டுமே அமைதியில், ஆனந்தத்தில்…. இங்கேயே!
அறியவும்!