" நீயே பரிபூரண நித்தியம் "

நான் அனுபவிக்கும் விஷயங்கள் எப்படி நிஜமற்றதாகும்? உதாரணமாக நான் இப்போது இந்த குளிர்ந்த நீரை பருகுகிறேன். இந்த அனுபவம் எப்படி நிஜமற்றதாகும்?

January 5, 2024 | 145 views

ஜியெம்: எந்த அடையாளத்தில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது?

தன்னை வடிவமாக அடையாளம் கொண்டு, தன்னில் இருக்கும்
சுய அறிவை அறியாமல் எழும் கேள்வியே இது.

உன் சுய அறிவு விழிக்காததால் உனக்கு பார்ப்பதெல்லாம் நிஜமாக தோன்றும்.

வடிவ அடையாளத்தில் காண்பதெல்லாம் கனவே!

வடிவத்திற்கு அப்பாற்பட்ட உன் சுய அறிவின் ஆரம்ப நிலையை நீ அறியாய்!

உறக்கத்தில் நீ காண்பது கனவு என எப்போது அறிகிறாய்?
உறங்கும் போதா? அல்லவே!
உறக்கத்தில் இருந்து விழித்த பின்னரே!

விழித்த நிலையில் தான் நிஜமற்ற கனவு நிலை அறியப்படுகிறது.

அவ்வாறே, தற்போது காண்பது நிஜமற்றது என காணும் போது தெரியாது.

கனவிற்குள், இருந்து கொண்டு காண்பது நிஜம் இல்லை என சொல்ல இயலாது.

அனைத்தும் நிஜமாகவே இருக்கும்.

விழித்து பார் தெரியும் எது நிஜமென!

விழிப்பில் காட்சிகள் இல்லை!
கனவு முழுக்க காட்சிகளே!

விழிப்பு என்பது உள்ளிருக்கும் அமைதியில் நிலைத்து இருப்பது….

கனவு என்பது காணும் காட்சிகள் அனைத்தும்.

உண்மை விழிப்பு நிகழும் வரை கனவே நிஜமாக தோன்றும்.

விழித்தால் தெரியும் எது நிஜமென!

☘️🪷☘️