" நீயே பரிபூரண நித்தியம் "

தியானம் !

March 22, 2022 | 192 views

தியானம் !

தியானம் என்பது முதலில் கண்களை மூடி உள்ளே பொதிந்து இருக்கும் அசைவற்ற அமைதியை அறிவது…..

இந்த அமைதி நிலையிலும் உன் இருப்பை நீ அறிவாய்….

இந்த அமைதியில் இருந்தே அகிலமும் அனைத்து வடிவங்களும், அசைவுகளும், ஓசைகளும் தோன்றுகிறது….

தியானத்தில்…
அமைதி நிலவுகிறது…
தெளிவு தென்படுகிறது….

உன் இருப்பில் தானே அனைத்தும் தோன்றுகிறது?

உன் இருப்பு இல்லாவிடில் இங்கு எதுவுமில்லை !

உன் இருப்பின் முக்கியத்துவத்தை அறியவே தியானம் தேவைப்படுகிறது!

அமைதியான உன் இருப்பே அனைத்திற்கும் அடித்தளம்.

இந்த அமைதி எல்லையில்லாதது.

இந்த அமைதியில் தான்…வடிவம், மனம், உணர்வுகள்… அனைத்தும் தோன்றுகிறது…

உன் நிலை அமைதி என்று ஆகும் பொழுது…. உன்னில் தோன்றி மறையும் வடிவங்களும், எண்ணங்களும் என் செய்யும் ?
இந்த அமைதி எல்லை இல்லாதது!

அமைதியின் உள்ளே ஆழ்ந்த பொக்கிஷம்!

ஆற்றல் மிக்கது…பிரபஞ்ச ஆற்றல் இதன் உள்ளே!…

இதை அறிய தவறலாமா?

இதை அறிய தவறுவது எங்ஙனம்?

உன் அற்புதத்தை… ஆனந்தத்தை…. அளவிடா ஆற்றலை …அறியவே தியானம்!

இந்த அமைதியே அனைத்திற்கும் வித்து!

முதலில் உன் இருப்பில் நிலை கொள்ளவும்!

உன் இருப்பின் அமைதியை அறிந்தால் இங்கு கவலை கொள்ள ஏதுமில்லை…!

முதலில் அறியவும்…உன் இருப்பை…அமைதியை…தியானத்தில்!

உள்ளிருக்கும் அமைதியை அறிவதைத் தவிர இங்கு அவசியமானது எதுவும் இல்லை!

இந்த அமைதியே ‘குரு’ !

அமைதியே குருவாக தெள்ளத் தெளிவாக…வழி காட்டும்!

தன் இருப்பை அறியாமல்…தான் இருப்பதே தெரியாமல் …

மயங்கிய நிலையில் வாழும் நாட்கள்…….வீணே!

விழிக்கவும் விரைவில்!

அறியவும் உன் இருப்பை அமைதியில்…..!

இதுவே தியானத்தின் ஆரம்பம்…..!