" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், தன்னை அறிவதன் மூலம் முன்கூட்டியே அனைத்தையும் அறிய முடியுமா?

July 26, 2022 | 118 views

ஜியெம்:

இக்கேள்வி, தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது.

சுய அறிவில் நிலைத்தால், இங்கு அனைத்தும் தானாக நிகழ்கிறது என அறிந்தால், இக்கேள்வி எழாது.

நிகழ்பவை அனைத்தும் தானாகவே நிகழ்கிறது…!

எந்த நிகழ்வும் நிஜம் இல்லை எனில்…

எந்த நிகழ்வை முன் கூட்டியே அறிய நீ முயற்சிக்கிறாய்?

தனித்த அடையாளத்தில் அனைத்து நிகழ்வுகளும் நிஜமாக உள்ளது தற்போது!

எனவே இக்கேள்வி!

சுய அறிவின்றி (Consciousness) இங்கு எது உள்ளது?

சற்றே ஆராயவும்!

கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியை கவனிக்கவும்!

அமைதியில் நிலைத்தால், அறியப்படும் இங்கு தோன்றும் எதுவும் நிஜம் இல்லை என!

பரவெளியில், நிகழும் நிகழ்வுகள் தானாகவே நிகழ்கிறது எனில், அவற்றில் சிறிதும் நிஜம் இல்லை எனில், இக்கேள்வி மதிப்பிழக்கிறது.

இங்கு நிகழும் நிகழ்வுகள் எதனால், எவ்வாறு நிகழ்கிறது என ஆராயவும்!

அறிந்தால், சுய அறிவே அனைத்திற்கும் மையம் என்றால், உன் சுய அறிவு, தன்னில் நிலை கொண்டு , தன்னை அறிய ஆரம்பிக்கும்!

இதுவே உன்னத வழி!

அறிந்தால் தெரியும், இங்கு எதுவும் நிகழவில்லை என!

தற்போது நிகழும் நிகழ்வுகளே நிஜமா?

அதிவேகத்தில் மாறிக்கொண்டே இருக்கும் நிகழ்வுகள் நிஜமாகுமா?

கவனம் முழுவதும் பார்ப்பதில் இருக்கும் வரை இக்கேள்விகள் எழும்!

எனது கேள்வி: பார்ப்பவர் யார்?

இதை அறிந்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும்!

முதலில் இதை கண்டு அறியவும்!

பின்னர் அறியப்படும்… நிகழ்பவை நிஜமா, இல்லையா என…

அறிவாயா தற்போதாவது?