ஜியெம்:
முழுமையை விளக்க இயலாது.
வடிவங்களுக்கு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நித்தியம்.
முழுமை – இருமை அற்றது.
அனைத்து தோற்றங்களும், நிகழ்வுகளும்,வார்த்தைகளும் இருமை நிலையில் தற்போது நிகழ்கிறது.
இக்கேள்வி இருமை நிலையில் எழுகிறது.
பதிலும் இருமை நிலையில் கொடுக்கப்படுகிறது.
இக்கேள்வியை உன் சுய அறிவே கேட்கிறது தன் முழுமையை அறிவதற்கு!
முதலில் சுய அறிவு நான் எனும் அறிவு தோன்றுகிறது.
உன் இருப்பு அறியப்படுகிறது.
உன் இருப்பில் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது!
சுய அறிவு விழித்த நிலையில் தோன்றி , உறக்கத்தில் மறைகிறது.
அனைத்து நிகழ்வுகளும் நான் எனும் அறிவில் நிகழ்கிறது!
சுய அறிவு மறைந்தவுடன் , அகிலம் ,அனைத்து நிகழ்வுகளும் அதில் மறைகிறது !
சுய அறிவு தன்னை வடிவமாக அடையாளம் கொள்வதால் இங்கு நிகழும் அனைத்தும் நிஜம் என ஒப்புக்கொள்கிறது!
எனவே, வடிவ அளவில்,தான் பிறந்ததாகவும், தனக்கு இறப்பு உண்டு என்றும் ஒப்புக் கொள் கிறது.
தன் எல்லை அற்ற பிறவா நிலையை அறிவதே இல்லை ….தன்னை அறிந்த குருவைக் காணும் வரை.
‘ நீ வடிவம் அல்ல! உனக்கு பிறப்பும் இல்லை ! இறப்பும் இல்லை! நீ நித்தியம்!
உன் முழுமையை அறிய முதலில் சுய அறிவில் நிலைக்கவும்!
இந்த சுய அறிவின் வழியே உனது முழுமையை அறியலாம் என்ற குருவின் போதனைப்படி உன் சுய அறிவு அமைதியில் நிலைத்து, தன்னுள் இருக்கும் ஒளியை காண்கிறது.
இங்கு காணும் அனைத்தும் ஒளியின் பிரதிபலிப்பே, நிஜம் அல்ல என அறிகிறது.
மேலும் அமைதியில் நிலைத்து, தன்னை கடந்து தன் இறப்பற்ற பிறவா நிலையை அறிந்து முழுமையுரு கிறது.
இங்கு உன் சுய அறிவில் நிகழும் அனைத்தும் நிஜம் அற்றது.
வடிவ அளவில் சுய அறிவு முழுமை அற்ற நிலையில் இருக்கிறது.
தன் முழுமையை அறிய முதலில் தான் வடிவம் அல்ல என அறிதல் அவசியம்.
கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியில் நிலை கொண்டால், வடிவங்கள் நிஜம் அல்ல என அறியலாம்.
அமைதியில் சுய அறிவு ஆரம்பமா கிறது! சுய அறிவு தன் ஆதாரத்தில் இருக்கிறது.
ஆதாரத்தில் தான் தோன்றி மறைகிறது.
தன்னை கடந்து , ஆதாரத்தை அறிந்து முழுமை யுருகிறது.
கேள்வி:எப்படி உணரப்படுகிறது?
இதை உணர முடியாது. அறியவே முடியும்.
தற்போதும் நீ முழுமையில் தான் இருக்கிறாய்!
இதை அறிவதே இல்லை!
ஏனெனில் , நீ உன் சுய அறிவின், ஆரம்பமும் , முடிவும் எதுவென அறியாய்!
இதை அறிய , தொடர்ந்து சுய அறிவில், அமைதியில் நிலைத்தல் அவசியமாகிறது.
முதலில் தான் சுய அறிவு என அறிதல் அவசியமாகிறது!
பின்னர், அந்த அறிவிலேயே , அமைதியாக, கவனித்தல் அவசியமாகிறது!
அனைத்தும் தானாகவே நிகழ்கிறது செய்பவர் இல்லை, என அமைதியில் தொடர் கவனித்தலில் முழுமை அறியப்படுகிறது!