" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், ஆழ்ந்த உறக்கத்தில் என் சுய அறிவு (consciousness) ஏன் மறைகிறது?

December 2, 2023 | 139 views

ஜியெம்:

ஆழ்ந்த உறக்கத்தில் உன் இருப்பு உனக்கு தெரிவதில்லை.

உனது இருப்பு சுய அறிவின் தொடக்கத்தில் தான் அறியப்படுகிறது.

அணுக்களின் தொடர் வினையன்றி (elemental interaction), நான் எனும் அறிவு நிகழாது.

அணுக்கள் அறியாது தன் தொடர் வினையின் ஆரம்பத்தை!

சுய அறிவும் அறியாது தன் ‘நான்’ எனும் அறிவின் நிகழ்வை!

அணுக்களின் தொடர் வினையும், நான் எனும் அறிவின் நிகழ்வும் தானாகவே நிகழ்கிறது.

அணுக்களின் தொடர்வினை நிகழ்வது தற்போது!

நான் எனும் அறிவின் நிகழ்வும், தற்போது தானாகவே நிகழ்கிறது.

அகிலம், கோள்கள், ஒட்டு மொத்த தோற்றங்களும் ….தானாகவே நிகழ்கிறது தற்போது!

இங்கே அனைத்தும் தானாகவே நிகழ்கிறது.

அனைத்து நிகழ்வுகளும் சுய அறிவால்….இங்கே…. இப்போது!

இங்கு தனித்து எதுவுமில்லை.

சுய அறிவு ஏன் உறக்கத்தில் மறைகிறது என்பதே கேள்வி

இங்கு… அணுக்களின் தொடர் வினையால் நான் எனும் அறிவும், அந்த அறிவிலே அகிலமும் தோன்றுகிறது தற்போது.

நான் எனும் அறிவு ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் அறியப்படுகிறது.

அணுக்களின் தொடர் வினையின் வேகம் குறையும் போது வளர்சிதை மாற்றத்தின் வேகமும் குறைகிறது.

ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் வடிவம் உறைந்து விடுவதால்,நான் எனும் அறிவு அறியப்படுவதில்லை…. ! இதுவே உறக்கம் எனப்படுவது.

உறக்கமும் தானாக நிகழும் நிகழ்வே!

நான் எனும் அறிவின் ஆரம்பமும், மறைவும் அணுக்களின் தொடர் வினையை சார்ந்துள்ளது.

அகிலம் நான் எனும் அறிவை சார்ந்துள்ளது.

நான் எனும் அறிவோ, அணுக்களின் தொடர் வினையை சார்ந்துள்ளது.

எனவே, இங்கே நிகழும், ஒட்டு மொத்த நிகழ்வுகளும், அணுக்களின் தொடர் வினையே ஆயினும் பார்ப்பவர்…விழிப்பு, கனவு, உறக்கம் போன்ற நிலைகளுக்கு முன்னரே நிலைத்திருப்பவர்.

பார்ப்பவர் பார்க்கின்ற அணுக்களின் விளையாட்டால் பாதிப்படைவதில்லை.

பார்ப்பவர் நித்தியம்!

அது நீயே!

அறியவும்!

🌻🌷🌻